Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

ஐரோப்பிய ஒன்றியத்தை நோக்கி தமிழ் மக்களிற்கு நீதி கேட்டு மனிதநேய நடை பயணம் மேற்கொண்டுள்ள திரு. ஜெகன் (62) அவுஸ்திரேலியா திருமதி தேவகி குமார் (36) சுவிஸ் திரு. வினோத் (48) பிரான்ஸ் ஆகிய மூன்று ஈழ உணர்வாளர்கள் இன்று 12வது நாளில் தமது நடை பயணத்தைத் தொடர்ந்து வருகின்றனர்.

இன்று (புதன்கிழமை) பி.பகல் 2மணியளவில் ஸ்ராஸ்பூர்க் ஐரோப்பிய ஒன்றிய பாராளுமன்ற தெற்காசிய நாட்டு விவகாரங்களுக்கான பொறுப்பாளர் திருமதி. ஜீன் லம்பேட் அவர்களை மானிட நேய நடைப்பயணத்தை மேற்கொண்டுள்ள திரு. ஜெகன் அவர்களும் திருமதி. தேவகி குமார் அவர்களும் சந்தித்திருந்தனர். இந்த சந்திப்பின்போது 10அம்சங்களை உள்ளடக்கிய மனு ஒன்றும் கையளிக்கப்பட்டது.

சிறீலங்காவில் மனித உரிமை மீறல் இன்று வரை நடப்பது தெரியும் எனவும் அதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதாகவும் ஐரோப்பிய ஒன்றியமானது சிறீலங்காவின் இனப்பிரச்சனை தொடர்பாக அதிக கவனம் செலுத்தவுள்ளதாகவும் தெரிவித்தார்.

அதே நேரம் இவ்வாறான அமைதி வழியிலான போராட்டங்கள் தொடர்ந்தும் புலம் பெயர்ந்து வாழ்ந்து வருகின்ற தமிழ் மக்களினால் மேற்கொள்ளப்பட வேண்டும் எனவும் கூறினார்.

இரண்டு மாத விடுமுறை காலத்தின் பின்பு இந்த வாரம் ஸ்ராஸ்பூர்க் ஐரோப்பிய ஒன்றியமானது தனது முதலாவது அமர்வை மேற்கொண்டுள்ளது. இந்த நேரத்தில் பலத்த வேலைப்பழுவின் மத்தியிலும் தமிழீழ உணர்வாளர்களின் மனித நடைப் பணத்தை அறிந்து அதற்கான நேரத்தை ஒதுக்கி இவர்களுடனான சந்திப்பை மேற்கொண்டிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

ஸ்ராஸ்பூர்க் ஐரோப்பிய ஒன்றிய பாராளுமன்றத்தின் முன்னிலையில் ஜேர்மன் வாழ் தமிழ் உறவுகளும் ஸ்ராஸ்பூர்க் தமிழ் உறவுகளும் ஒன்று கூடி உற்சாகம் வழங்கியிருந்தனர்.

மானிய நேய நடைப்பயணம் இன்று ஸ்ராஸ்பூர்க் ஐரோப்பிய ஒன்றிய பாராளுமன்றத்தில் இருந்த சந்திப்பை முடித்துக் கொண்டு மீண்டும் பெல்ஜியம் நோக்கி தொடர்கிறது.

இந்த தொடர்ச்சியான மனிதநேய நடை பயணத்திற்கு ஐரோப்பா வாழ் அனைத்து தமிழ் மக்களும் தொடர்ச்சியான ஆதரவினை வழங்குமாறு அழைப்பு விடுத்துள்ளனர்.

செல்லும் வழியெங்கும் சேர்ந்து நடவுங்கள். 0033601094027இந்த தொலைபேசி இலக்கத்துக்கு தொடர்புகொண்டும் www.walk-for-justice.org என்ற பிரத்தியேக இணையப்பக்கத்திலும் பாதை விபரங்களை உடனுக்குடன் அறிந்து பிரதேசவாரியாக ஆதரவளியுங்கள்.




மேலும் எமது தளங்கள்:

ஈழத்து காணொளிகள்

ஆய்வுகள், கட்டுரைகள்

0 Responses to மனித நேய நடைப்பயணர்கள் ஸ்ராஸ்பூர்க் ஐரோப்பிய பாராளுமன்றத்தில் மனு கையளிப்பு

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com