பத்து மாதம் சுமந்து பிள்ளையை பெற்றெடுத்த தாயான பெண்ணே!
பாதம் சிவக்க பகல் இரவாய் நடந்து தன் பெண்ணினத்திற்கு பெருமை சேர்க்கும் கண்ணே!
நாடு இனம் என்ற தாகத்தால் ஈழப்பெண் நான் என உலகிற்கு எடுத்துரைக்க வலி தாங்கி நெடும் தூரம் நடக்கிறாயே, என் நெஞ்சில் நிறைந்த தாய் மண்ணே!
நீ ஈழப்பெண் தான், தமிழ் உணர்வுள்ள மகள் தான் என்பதையிட்டு பெருமையடைகின்றோம்!
ஜரோப்பிய ஒன்றியம் நோக்கி பயணித்துக்கொண்டிருக்கும், திரு. ஜெகன் அவர்களுக்கும், திருமதி. தேவகி குமார் அவர்களுக்கும், மற்றும் திரு. வினோத் அவர்களுக்கும்! சுவிஸ் ஈழத்தமிழரவை மகளிர் அணி நன்றிகளையும் பாராட்டுக்களையும் தெரிவிக்கின்றோம்!
பெண்மை இதமானது – ஆனால் பொங்கியதால் புயலானது
தாய்மை அன்பானது – ஆனால் எழுந்ததால் எரிமலையானது
புறநாணுற்றுத்தாய் போல் புறப்பட்டுவிட்ட வீரத்தாயே உன்னை வாழ்த்துகின்றோம்!
பொறுத்தது போது பொங்கி எழு தமிழா
இழப்பது அடைவதற்கு என்று தெரிந்து கொள்
தோற்பது வெல்வதற்கென்று புரிந்துகொள்!
சதி ஏமாற்றம் தரலாம் – மதி தளராதே
மறுமுறை ஏமாற்றமுடியாது என்பதை உறுதி கொள்!
அதர்மம் தலைதூக்கினால் தான், தர்மம் வெல்லும் இது தான் நடக்கிறது. லண்டனில் இருந்து ஜெனிவாவில் வந்து மீண்டும் தொடர்கிறது பெல்ஜியம் சென்று முறையிடுவோம்,
ஜரோப்பா புரிந்துகொள்ளட்டும் தாங்கள் தவறை!
எங்களுடன் எமது இனம் நிற்கிறது உலகத்தமிழர்கள் துடிக்கிறார்கள், உலகம் முழுவது பேசட்டும் உலக சமுதாயம் கண்திறக்கட்டும், தொடருங்கள் நில்லாதீர்கள்!
இனி ஓயமாட்டோம்! போராட்ட வடிவங்களை மாற்றுவோம்!
ஓன்று சேருவோம்! ஒற்றுமையைக் கடைப்பிடிப்போம்!
*இலங்கை அரசு மீது போர்க்குற்ற விசாரணை நடாத்தவேண்டும், அதற்கு ஜரோப்பிய மன்றம் அழுத்தம் கொடுக்கவேண்டும்.
*பெண்கள் சிறுவர்கள் மீது அநீதியிழைத்த ஸ்ரீலங்கா அரசு மீது சர்வதேச நீதிமன்றத்தில் தண்டனை வழங்கப்படவேண்டும், அத்துடன் சிறையில் தவிக்கும் தமிழ் அரசியல் கைதிகளை
விடுவிக்கப்படவேண்டும்.
*மனித உரிமைகள் மதிக்கப்படும் வரை ஸ்ரீலங்கா அரசை அனைத்து நாடுகளும் புறக்கணிக்கவேண்டும்.
*தமிழ் மக்களின் சுயநிர்ணய உரிமையை அங்கீகரிக்கப்படவேண்டும்.
போன்ற முக்கியமான கோரிக்கைகளுடன் பயணிக்கும் அந்த மூவருக்கும் எமது பாராட்டுக்கள்!
மக்கள்உங்களுக்கு ஊக்கம் தருவார்கள். தாயக விடுதலைக்காக, எமது நியாயமான கோரிக்கைக்காக, எமது மக்களின் சுயநிர்ணய
உரிமைக்காக தடைகளை மீறி, மலைகளில் ஏறி, எமது இலட்சிய பாதையை அடைந்தே தீருவோம்!
அதுவரை ஓயோம்! என சபதமிடுவோம்!
இது எமது கடமை, புலம்பெயர்ந்த தமிழரின் காலம்,
உறுதிதழரோம், உலக மக்களின் காதுகளில் எமது தமிழ் ரீங்காரம் கேட்க ஓயாது முழங்குவோம்!
“மக்கள் புரட்சி வெடிக்கட்டும்” என்று தமிழர் மனங்களில் சூழுரைத்துச் சென்ற தியாகி தீலீபனின்
நினைவுத்தினத்தன்று அவரின் நினைவேந்தி வீரச்சபதமெடுப்போம், அநீதி செய்த துரியோதனன் சபைக்கு சாபமிட்ட பாஞ்சாலி போல், அநீதி அழிக்க கண்ணபிரானின் துணையோடு தர்மம் வெல்லச்செய்வோம்!
தமிழினமே கலங்கவேண்டாம்! விடிவு உறுதி, விடாது செயல்படுங்கள், அடம்பன் கொடியும் திரண்டால் மிடுக்கு மறந்துவிடாதீர்கள்!
ஒன்றுபட்ட சக்தியாக விடுதலைக்காக உலகின் முற்றமெங்கும் அணிதிரள்வோம்!
சுவிஸ் ஈழத்தமிழரவை மகளிர் அணி
********************************************
மேலும் எமது தளங்கள்:
ஈழத்து காணொளிகள்
ஆய்வுகள், கட்டுரைகள்

0 Responses to மனித நேய நடைப்பயணம்: சுவிஸ் மக்களவை மகளிர் அணியின் வாழ்த்துச் செய்தி