இலங்கையின் போர்க்குற்றங்கள் மற்றும் மனித உரிமை மீறல்கள் தொடர்பாக ஆலோசனை வழங்குவதற்காக ஐ.நா.சபையினால் நியமிக்கப்பட்டுள்ள நிபுணர்கள் குழு இந்த வாரம் ஐக்கிய நாடுகள் செயலாளர் நாயகம் பான் கீ முனை சந்திக்கவுள்ளது.
எதிர்கால நடவடிக்கைகள் குறித்து ஆராய்வதற்காக இந்த குழு கலந்துரையாடல்களை மேற்கொள்ளும் என ஐக்கிய நாடுகளின் உத்தியோகபூர்வ இணையத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அதேவேளை, திறன்மிக்க பணிகளுக்கான முன்னேற்பாடுகளை மேற்கொள்ளும் நோக்கில் இந்த குழுவினர் அதிகாரிகளுக்கு ஆதரவளிப்பார்கள் என பேச்சாளர் ஒருவர் கூறியதாக அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமது நடவடிக்கைகளை இந்த வாரத்தில் ஆரம்பிக்கும் நோக்கில் செயலாளர் நாயகம் பான் கீ மூனுடன் இந்தக்குழுவினர் கலந்துரையாடவுள்ளனர்.
இதனிடையே, இலங்கை தொடர்பாக ஆராய்வதற்கு ஆலோசனை குழுவுக்கு 4 மாத கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.
இதன்போது ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மற்றும் ஐக்கிய நாடுகள் செயலாளர் நாயகத்திற்கு இடையில் கடந்த வருடம் ஏற்படுத்திக்கொள்ளப்பட்ட கூட்டறிக்கையின் செயற்பாடு தொடர்பாகவும் ஆராயப்படவுள்ளது.
இதேவேளை இலங்கை அரசாங்கத்தின் 18 வது அரசியல் திருத்தம் தொடர்பாக கருத்து வெளியிட்டுள்ள ஐக்கிய நாடுகள் சபை, அது நாட்டின் உள்விவகார விடயம் என குறிப்பிட்டுள்ளது.
மேலும் எமது தளங்கள்:
ஈழத்து காணொளிகள்
ஆய்வுகள், கட்டுரைகள்

0 Responses to சிறிலங்கா மீதான போர்க்குற்ற விசாரணை: ஐ.நா. வின் நிபுணர் குழு பான் கீ மூனை சந்திக்கிறது