18 ஆவது திருத்தச் சட்ட மூலத்திற்கு எதிராக நாட்டில் இராணுவக் கிளர்ச்சி ஏற்படக் கூடிய அபாயம் காணப்படுவதாக முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா வெளியிட்ட கருத்து தொடர்பில் அரசாங்கம் கவனம் செலுத்தி வருவதாக ஊடக அமைச்சர் தெரிவித்துள்ளார்.
18 ஆவது திருத்தச் சட்ட மூலத்தின் ஊடாக சர்வாதிகார ஆட்சி ஏற்படக் கூடிய அபாயம் காணப்படுவதாகவும் அதற்கு எதிராக கிளர்ச்சிகள் வெடிக்கலாம் எனவும் முன்னாள் இராணுவத் தளபதி ஜெனரல் பொன்சேகா அண்மையில் நாடாளுமன்றில் தெரிவித்திருந்தார்.
இராணுவ சூழ்ச்சித்திட்டமோ அல்லது கிளர்ச்சியோ வெடிக்கக் கூடுமென்ற பொன்சேகாவின் கூற்று தொடர்பில் அரசாங்கம் உன்னிப்பாக அவதானித்து வருவதாக ஊடக அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.
முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகாவின் அடி மனதில் நீண்ட காலமாக இருந்த குரோத உணர்வின் வெளிப்பாடே இவ்வாறான கருத்தக்களின் மூலம் புலனாவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
சரத் பொன்சேகாவின் கருத்து தொடர்பில் எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து அரசாங்கம் கவனம் செலுத்தி வருவதாக அவர் தெரிவித்துள்ளார்.
மேலும் எமது தளங்கள்:
ஈழத்து காணொளிகள்
ஆய்வுகள், கட்டுரைகள்

0 Responses to இராணுவ கிளர்ச்சி ஏற்படலாம் என பொன்சேகா வெளியிட்ட கருத்து குறித்து அரசாங்கம் கவனம்