தமிழர் பிரச்சினைக்கு அரசியல் தீர்வு காணும் விடயத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இன்றைய கால மாற்றத்தைக் கட்டாயம் உணர்ந்து சில விட்டுக் கொடுப்புக்களுக்குத் தயாராக வேண்டும் என்று இரு நாள்கள் விஜயம் ஒன்றை மேற்கொண்டு இந்தியா சென்ற ஐ.தே.க. தலைவர் ரணில் விக்கிரமசிங்க சென்னையில் ஊடகவியலாளர்களுக்கு தெரிவித்துள்ளார்.
அவர் அங்கு முக்கியமாகத் தெரிவித்துள்ளவை வருமாறு:
இலங்கைத் தமிழர் பிரச்சினைக்கு அரசியல் தீர்வு காணும் முயற்சியில் சம்பந்தப்படுகின்ற அனைத்துத் தரப்பினர்களுக்கும் ஒத்துழைப்பு வழங்க ஐ.தே.கட்சி தயாராகவுள்ளது. நாம் தீர்வை வரவேற்கின்றோம். அதற்காகத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, இலங்கை அரசு, இந்திய அரசு உட்பட சம்பந்தப்படுகின்ற தரப்பினருக்கும் ஆதரவு வழங்க தயாராகவேயிருக்கின்றோம்.
வட மாகாண சபைத் தேர்தல் எப்போது நடத்தப்பட வேண்டும் என்பதைத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் எம்.பிக் கள் 14 பேரும் ஒரு மனதாகத் தீர்மானிக்க வேண்டும். அவர்கள் அனைவரதும் பங்குபற்றுதலுடன் இத் தீர்மானம் எடுக்கப்பட வேண்டியது அவசியம். நாட்டில் நிரந்தர சமாதானத்தை நிலை நாட்டுகின்றமைக்கு அனைத்து இன மக்களும் சமத்துவமாக நடத்தப்பட வேண்டும். வட மாகாணத்தில் இயல்பு நிலை மீளக்கட்டி எழுப்பப்பட வேண்டும். அதிகாரப் பரவலாக்கம் வடமாகாணத்துக்கு மிகமிக அவசியம். அகதி முகாம்களின் நிலை திருந்தியுள்ளது. ஏனெனில் அங்கு தங்கியிருந்த அநேகர் வெளியேறி விட்டார்கள்.
ஆனால் அவர்களில் சிலர் முகாம்களுக்குத் திரும்பி வரக் கூடும். ஏனெனில் அடுத்த மாதம் மழை காலம் ஆரம்பமாகின்றது. சில நேரங்களில் தமிழக மீனவர்கள் இலங்கைக் கடற்பரப்புக்குள் வந்து விடுகின்றார்கள். தமிழக மீனவர்கள் சுட்டுக் கொல்லப்படுகின்ற பிரச்சினை குறித்து ஆற அமர இருந்து இரு தரப்பினரும் பேசி எப்படிக் கடற்பரப்பைக் கண்காணிக்கலாம் என்கிற தீர்மானத்துக்கு வர வேண்டும் என்றார்.
மேலும் எமது தளங்கள்:
ஈழத்து காணொளிகள்
ஆய்வுகள், கட்டுரைகள்

0 Responses to இனப்பிரச்சினையை தீர்ப்பதற்கு கூட்டமைப்பிடம் விட்டுக்கொடுப்பை கோருகிறார் ரணில்