Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

உலக தமிழ் பண்பாட்டு இயக்கத்தின் ஐரோப்பிய ஒன்றியம் ஏற்பாடு செய்துள்ள அகம் புலம் தமிழர் வாழ்வியல் மகாநாட்டிற்கான அனைத்து ஏற்பாடுகளும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதாக மகாநாட்டு அமைப்பாளரும், ஐரோப்பிய ஒன்றியத்தலைவருமான துரை கணேசலிங்கம், மகாநாட்டு செயலாளருமான .பரமேஷ்வரன் ஆகியோர் ஊடகங்களுக்கு விடுத்துள்ள சிறப்பறிக்கை.

உலக தமிழ் பண்பாட்டு இயக்கத்தின் ஐரோப்பிய ஒன்றியம் நடத்தும் "அகம் புலம் தமிழர் வாழ்வியல் சிறப்பு மகாநாடு" எதிர்வரும் 11ம் திகதி சனிக்கிழமை காலை 10மணிதொடக்கம் இரவு 10மணிவரை (11.09.2010) ஜேர்மனியில் உள்ள ரெயினே மாநகரில் உள்ள எலிசபெத் பாடசாலை மண்டபத்தில் மகாநாட்டு தலைவர் பேராசிரியர் .பாலசுந்தரம் அவர்களின் தலைமையில் ஆரம்பமாகும்.

ரெயினே நகர முதல்வர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு மங்கள விளக்கேற்றி மகாநாட்டினை சம்பிரதாயபூர்வமாக ஆரம்பித்து வைப்பார். உலகெங்கும் பரந்து வாழும் தமிழ் இனம் ஒற்றுமையோடும் தமது தாய்மொழியை மறக்காமல் வாழ வேண்டும் என்பதற்காகவும் தமிழர் சமூகம் தனது உரிமைகளைப்பெற்று தலைநிமிர்ந்து வாழவேண்டும் என்பதற்காகவும் அரசியல் சார்பற்ற ரீதியில் இன மத பேதங்களை கடந்து உலகத்தமிழ் பண்பாட்டு இயக்கம் செயற்பட்டு வருகிறது என்பது யாவரும் அறிந்ததே. தமிழ் இனம் ஒரு குடையின் கீழ் செயற்பட வேண்டும் என கடந்த 36 வருடங்களாக செயற்படும் இந்த அமைப்பு அண்மைக்கால சூழலுக்கு ஏற்ப அகத்திலும் புலத்திலும் வாழும் தமிழ் மக்களின் அமைதியான வாழ்க்கை, தமிழ் மொழிக்கல்வி, தமிழர் பண்பாட்டை பேணல், புனர்வாழ்வு என்ற குறிக்கோளை அடையும் நோக்கில் இந்த மகாநாடு நடத்தப்படுகிறது.

இம்மநாட்டில் தமிழ்தேசியக்கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்களான இரா. சம்பந்தன், மாவை சோ.சேனாதிராசா, சிவஞானம் சிறிதரன், பா. அரியநேத்திரன், சீ.யோகேஸ்வரன் ஆகியோருடன் சுடர்ஒளி உதயன் பிரதம ஆசிரியர் .வித்தியாதரன், கொழும்பு றோயல் கல்லூரி பிரதிஅதிபர் மாரிமுத்து கணபதிப்பிள்ளை, இலங்கை தமிழர் ஆசிரியர் சங்க உபதலைவர் ஜெயசீலன் உட்பட மலேசியா கனடா, அவுஸ்ரேலியா தென்னாபிரிக்கா, ஐரோப்பா ஆகிய நாடுகளில் உள்ள தமிழ் அறிஞர்களும், ஐரோப்பிய நாடுகளில் உள்ள சிரேஷ்ட ஊடகவியலாளர்களும் கலந்து கொண்டு சிறப்பிக்க உள்ளனர்.

இம்மாகாநாட்டில் கவியரங்கு, கருத்தரங்கு, ஆய்வரங்கு, ஓவியக்கண்காட்சி, நூல் கண்காட்சி, சிறப்புரைகள் உட்பட பல கலைநிகழ்ச்சிகளும் இடம்பெற உள்ளன.
அனைத்து தமிழ் உறவுகளும் இம்மாநாட்டில் கலந்து கொண்டு சிறப்பிக்குமாறு மகாநாட்டு ஏற்பாட்டாளர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.


தொடர்புகளுக்கு:

0049 2014748383
0049 5971984564
0049 5908969296
0049 1737457714

imtc1974@yahoo.com

மேலும் எமது தளங்கள்:

ஈழத்து காணொளிகள்

ஆய்வுகள், கட்டுரைகள்

0 Responses to எதிர்வரும் 11ம் திகதி ஜேர்மனியில் "அகம் புலம் தமிழர் வாழ்வியல் சிறப்பு மகாநாடு"

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com