பொன்சேகாவுக்கு இரண்டாவது இராணுவ நீதிமன்றம் 3 வருட சிறைத்தண்டனையை வழங்கியுள்ளமையை அடுத்து அவரின் நாடாளுமன்ற உறுப்புரிமையை அவரின் மனைவி அனோமாவுக்கு வழங்குவது தொடர்பாக ஜனநாயக தேசியக் கூட்டமைப்பு ஆராய்ந்து வருகிறது.
ஆயுத கொள்வனவு ஊழல் உட்பட்ட 4 குற்றச்சாட்டுக்களின் பேரில் சரத் பொன்சேகாவுக்கு கடந்த வெள்ளிக்கிழமையன்று மூன்று வருட சிறைத்தண்டனை இராணுவ நீதிமன்றத்தினால் வழங்கப்பட்டது.
எனினும் தற்போது ஐக்கிய நாடுகளின் அமர்வுக்காக சென்றுள்ள ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச எதிர்வரும 28 ஆம் திகதி நாடு திரும்பிய பின்னரே அந்த தீர்ப்பு உறுதிப்படுத்தப்படும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
இந்தநிலையில் அவர் சிறைத்தண்டனைக்கு உட்படுத்தப்பட்டால், தேசியப்பட்டியல் மூலம் அவரின் மனைவி அனோமாவை நாடாளுமன்ற உறுப்பினராக்குவதற்கு முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன.
இதற்கு முன்னோடியாக தற்போது தேசிய பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினராக உள்ள டிரான் அலஸை ராஜினாமா செய்யவைத்து, அனோமாவை நாடாளுமன்ற உறுப்பினராக கொண்டு வர முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன.
மேலும் எமது தளங்கள்:
ஈழத்து காணொளிகள்
ஆய்வுகள், கட்டுரைகள்

0 Responses to பொன்சேகா சிறை சென்றால், அவரின் துணைவியார் நாடாளுமன்ற உறுப்பினராவார்