கிழக்கு மாகாண சபையினால் நிர்வகிக்கப்படும் மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள 8 கிராமிய வைத்தியசாலைகள் மூடப்பட்டுள்ளன.ஊழியர்கள், மருத்துவ உபகரணங்கள், மருந்து பொருட்களுக்கான தட்டுபாடு ஆகியன காரணமாகவே இந்த வைத்தியசாலைகள் மூடப்பட்டுள்ளதாக தெரியவருகிறது. இறையாமடு, கீழ் மினிமடு, மாவக்குடா, வவுணதீவு, கொட்டாமுனை, உன்னிச்சி உள்ளிட்ட 8 கிராமிய வைத்தியசாலைகள் மூடப்பட்டுள்ளன.
எதிர்காலத்தில் வாகரை, கரடியனாறு,மாவைவேம்பு போன்ற கிராமிய வைத்தியசாலைகளும் மூடப்படும் நிலை ஏற்பட்டுள்ளதாக தெரியவருகிறது.
கிழக்கு மாகாணத்தை தனியே நிர்வகிப்பதன் மூலம் பாரிய வளர்ச்சி அடையலாம் என அதன் முதலமைச்சர் பிள்ளையார் தெரிவித்துவருகின்றார். ஆனால் தற்போதைய மாகாண சபை மூலம் பாடசாலைக்கு ஒரு மலசலகூடம் அமைத்துக்கொடுப்பதற்கும் கிழக்கு மாகாண சபையின் ஆளுநரின் அனுமதி பெறவேண்டியுள்ளது என அதிகாரிகள் தெரிவிக்கின்றார்கள்.



0 Responses to கிழக்கு மாகாணத்தில் எட்டு கிராமிய வைத்தியசாலைகள் மூடப்படுகின்றன!