பிரித்தானிய படைவீரர்களையும், தமிழீழ போராளிகளையும் நினைவுகூர்ந்து அவர்களுக்கு மரியாதை செலுத்தும் முகமாக மேற்கொள்ளப்படும் இந்த நடைப்பயணத்தை பேர்மிங்காம் லோட் மேயர் லென் கிறேஜொறி அவர்கள் ஆரம்பித்துவைத்தார்.
ஆரம்ப நிகழ்வில் இந்த நடைப்பயணத்தின் ஏற்பாட்டாளர்களில் முதன்மையானவரான திரு.ஜோகணேஸ் அவர்கள் அங்கிருந்தவர்கள் மத்தியில் இந்த நடைப்பயணம் தொடர்பான சிறு விளக்கம் அளித்தார். தொடர்ந்து லோட் மேஜர் லென் கிறேஜொறி அவர்களும், லேடி மயோறெஸ் அவர்களும், கத்தோலிக்க தேவாலயத்தின் மதகுருவான டேவ் அவர்களும் இந்த நடைப்பயணம் வெற்றிபெற வாழ்த்துக்களையும், ஆசீர்வாதங்களையும் தெரிவித்தனர்.
நேற்று (02-11-2010) செவ்வாய்க்கிழமை காலை 10:15 க்கு ஆரம்ப நிகழ்வுகள் விக்டோரியா ஸ்குயாரில் இடம்பெற்றது. அதனை தொடர்ந்து சரியாக 10:30 க்கு நடைப்பயணம் ஆரம்பமானது.
பேர்மிங்காம் முதல் லண்டன் வரையான இந்த நடைபயணத்தின் முதல் நாளான நேற்று திரு.ஜோகணேஸ், திரு. நிமலன், திரு. சிறீறஞ்சன், திரு. லோகேஸ்வரன், திரு. மொறிஸ், திரு. நிக்சன், திரு. விஜய், திரு. ஸ்கந்ததேவா, திரு. சுதா, திரு. வசி ஆகியோர் நடைப்பயணத்தை மேற்கொண்டிருந்தனர்.
ஆரம்பத்தில் நகர் புறங்களினூடாக பயணித்த இந்த நடைபயணம் பிரதான வீதிகள், பெருந்தெருக்கள், மற்றும் கிராமங்களினூடாக கவுன்றியை சென்றடைந்தது. காலை 10:30 க்கு பேர்மிங்காம் விக்டோரியா ஸ்குயாறில் ஆரம்பமான இந்த நடைபயணம் 20 மைல்களை கடந்து தனது முதல்நாள் நடைபயணத்தை கவுன்றி வோர் மெமோறியல் பாக்கில் மாலை 6:25 மணிக்கு நிறைவுசெய்தனர்.
அப்பகுதியில் கவுன்றிவாழ் தமிழ்மக்கள் பலர் வந்து நடைபயணம் மேற்கொண்டவர்களை மலர் செண்டுகள் கொடுத்து வரவேற்றனர். பின்னர் அம்மக்களால் அவர்களுக்கான தங்குமிடவசதிக்காக ஒழுங்கு செய்யப்பட்டிருந்த கவுன்றியில் அமைந்துள்ள தமிழர் ஒருங்கிணைப்பு குழுவின் மண்டபத்திற்கு அழைத்துச்சென்று அங்கு உணவு வழங்கி கௌரவித்தனர்.
இன்று காலை 9:00 மணிக்கு மீண்டும் தாம் நேற்று நிறைவு செய்த கவுன்றி வோர் மெமோறியல் பாக்கில் இருந்து தமது இரண்டாம் நாள் நடைபயணத்தை இவர்கள் ஆரம்பிக்கவுள்ளதோடு எதிர்வரும் 07-11-2010 ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 6:00 மணியளவில் லண்டன் வெஸ்மினிஸ்ரர் பகுதியை இவர்கள் சென்றடையவுள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது.
மேலும் எமது தளங்கள்:
ஈழத்து காணொளிகள்
ஆய்வுகள், கட்டுரைகள்



0 Responses to பிரித்தானியாவில் ஆரம்பமாகிய தமிழர்களின் "ஹாட் 2 ஹாட் வோக்" (படங்கள் இணைப்பு)