பாதுகாப்புச் செயலாளர் போன்றே இராணுவத் தளபதியும் இராணுவத்தின் சிங்க ரெஜிமண்ட் மீது சந்தேகமும், அச்சமும் கொண்டிருப்பதாக சிங்கள இணையத்தளமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.அதன் காரணமாக கடந்த 06ம் திகதி சிங்க ரெஜிமண்ட் தலைமையகமான அம்பேபுஸ்ஸ இராணுவ முகாமில் நடைபெற்ற வைபமொன்றில் இராணுவத் தளபதி ஜகத் ஜயசூரிய கலந்து கொள்ளவிருந்ததை முன்னிட்டு அங்கிருந்த கட்டளைத் தளபதி உள்ளிட்ட அனைத்து இராணுவத்தினரதும் ஆயுதங்கள் களையப்பட்டதாக குறித்த இணையத்தளம் சுட்டிக்காட்டுகின்றது.
சிங்க ரெஜிமண்ட்டின் தற்போதைய கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் அருண ஜயதிலக்க பாதுகாப்புச் செயலாளர் மற்றும் இராணுவத்தளபதி ஆகியோரின் நம்பிக்கைக்குரியவராக இருந்த போதிலும், இராணுவத்தளபதியின் வருகையை முன்னிட்டு அவரும் கூட நிராயுதபாணியாக்கப்பட்டுள்ளார்.
அதற்கு மேலதிகமாக இராணுவத்தளபதியின் வருகைக்கு இரண்டு நாட்கள் முன்னதாகவே அம்பேபுஸ்ஸை இராணுவ முகாம் அமைந்திருந்த பகுதியை இராணுவப் பொலிசார் தம் கட்டுப்பாட்டில் வைத்திருந்தனர். அவர்களின் உத்தரவை மீறி அங்கு ஒரு புல்லைக் கூட அசைக்க முடியாத இறுக்கமான கட்டுப்பாடு நிலவியிருந்தது.
சிங்க ரெஜிமண்ட் இராணுவத்தின் ஒரு முக்கிய படைப்பிரிவாக இருக்கின்ற போதிலும், முன்னைய இராணுவத்தளபதி சரத் பொன்சேக்காவும் சிங்க படைப்பிரிவைச் சேர்ந்தவர் என்பதே அப்பிரிவின் வீரர்கள் மீது இராணுவத் தளபதி மற்றும் பாதுகாப்புச் செயலாளர் ஆகியோர் சந்தேகப் பார்வை வீசுவதற்கு காரணமாக அமைந்துள்ளது.
மேலும் எமது தளங்கள்:
ஈழத்து காணொளிகள்
ஆய்வுகள், கட்டுரைகள்



0 Responses to சிங்க ரெஜிமண்ட்டுக்கு அஞ்சும் இராணுவத் தளபதி