இலங்கை அகதிகளுக்காக அவுஸ்திரேலியா கிறிஸ்மஸ் தீவில் தடுப்பு முகாமை அமைத்துள்ளமையை அவுஸ்திரேலிய மனித உரிமைகள் ஆணைக்குழு கண்டித்துள்ளது.கிறிஸ்மஸ் தீவில் அடைத்து வைக்கப்பட்டுள்ள இலங்கை மற்றும் ஏனைய அகதிகள் வரையறைக்கு உட்பட்ட அத்தியாவசிய சேவைகளேயே பெறுகின்றனர்.
அத்துடன் சட்டஉதவி மன உளைச்சல் சித்திரவதை என்பவற்றுக்குள் உள்ளாவதாக அந்த ஆணைக்குழு குற்றம் சுமத்தியுள்ளது.
இந்த குற்றச்சாட்டுக்களை அந்த ஆணைக்குழு 75 பக்கங்களிலான அறிக்கை ஒன்றின் மூலம் வெளியிட்டுள்ளது.
அவுஸ்திரேலியா கிறிஸ்மஸ் தீவில் அகதிகளை தடுத்து வைத்திருப்பது மனித உரிமைகள் கடுமையாக மீறும் செயல் என அந்த ஆணைக்குழு விபரித்துள்ளது.
இலங்கை மற்றும் ஆப்கானிஸ்தானிய அகதிகளுக்கான அடைக்கல கோரிக்கையை கால தாமதம் செய்வதன் மூலம் அவுஸ்திரேலியா அவர்களின் தடுத்து வைத்தல் காலத்தை நீடிப்பதாக அவுஸ்திரேலிய மனித உரிமைகள் ஆணைக்குழு சுட்டிக்காட்டியுள்ளது.
அவுஸ்திரேலியாவுக்கு வரும் அகதிகளை சுகாதாரம் மற்றும் ஏனைய சட்டமுறைகளுக்காகவே கிறிஸ்மஸ் தீவுக்கு அனுப்புவதாக அந்த நாட்டின் அரசாங்கம் கூறுகிறது.
கடந்த நவம்பர் மாதம் முதலாம் திகதியன்று கிறிஸ்மஸ் தீவுக்கு சென்று வந்த சர்வதேச மன்னிப்பு சபையின் குழுவினர் குறித்த முகாம்கள் தொடர்பில் பல்வேறு கருத்துக்களை தெரிவித்துள்ளனர்.
இந்த கருத்துக்கள் நாட்டின் உறுதித் தன்மையற்ற நிலையை எடுத்துக் காட்டுவதுடன் அவுஸதிரேலியாவின் அகதிகள் பாதுகாப்பு என்ற பெயருக்கும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளதாக அவுஸ்திரேலிய மனித உரிமைகள் ஆணைக்குழு குறிப்பி;ட்டுள்ளது.
எனவே அவுஸ்திரேலியா இலங்கை அகதிகள் தொடர்பிலான தமது கடும் போக்கை தளர்த்திக் கொள்ள வேண்டும் என அந்த நாட்டின் மனித உரிமைகள் ஆணைக்குழு கோரியுள்ளது.
மேலும் எமது தளங்கள்:
ஈழத்து காணொளிகள்
ஆய்வுகள், கட்டுரைகள்



0 Responses to இலங்கை அகதிகள் தொடர்பில் அவுஸ்திரேலியாவின் கடும்போக்கில் மாற்றம் வேண்டும்