Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

தம்மை முன்கூட்டியே விடுதலை செய்யக்கோரி, சென்னை மேல் நீதிமன்றத்தில் இந்திய முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் கொலை தண்டனை கைதியான நளினி முருகன் மீண்டும் மனு தாக்கல் செய்துள்ளார்.

இதனை இதற்கு பதிலளிக்குமாறு தமிழக அரசுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

நளினி கடந்த 19 வருடங்களாக சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.

தமது நன் நடத்தையை காரணமாக கொண்டு முன்கூட்டியே விடுதலை செய்யுமாறு கோரி அவர் 2007 ஆம் ஆண்டு மனுத்தாக்கல் செய்தார்.

இதன்போது நீதிமன்ற உத்தரவின்படி ஆலோசனைக்குழு ஒன்று நியமிக்கப்பட்டு அந்த குழு நளினியின் கோரிக்கை நிராகரிக்கப்பட்டது.

இதன் போது இந்திய பிரதமர் ராஜீவ் காந்தியை கொலை செய்து கடுமையான குற்றம் புரிந்துள்ளார் என்ற ஆலோசனைக்குழுவின் பரிந்துரையை மாத்திரமே தமிழக அரசாங்கம் கவனத்தில் கொண்டுள்ளது.

எனினும் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை தமிழக அரசாங்கம் கருத்திற் கொள்ளவில்லை.

நீதிமன்றம் இந்த சம்பவத்தின் சதித்திட்டம் தொடர்பில தமக்கு இறுதிவரை தெரியாது என கூறியிருப்பதை மனுதாரரான நளினி முருகன், தற்போது தாக்கல் செய்துள்ள மனுவில் சுட்டிக்காட்டியுள்ளார்.

மேலும் எமது தளங்கள்:

ஈழத்து காணொளிகள்

ஆய்வுகள், கட்டுரைகள்

0 Responses to தம்மை விடுதலை செய்யக் கோரி நளினி மீண்டும் மனுதாக்கல்

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com