Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

பூநகரி பகுதியில் தனிமையில் மூன்று பிள்ளைகளுடன் வசித்து வந்த இளம் தாய் ஒருவர் இரண்டு இராணுவச் சிப்பாய்களால் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டுள்ளார் என்றும் இது தொடர்பாக தமக்கு முறைப்பாடு கிடைத்துள்ளது என்றும் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் ஸ்ரீதரன் தெரிவித்தார்.

பூநகரி, கிராஞ்சி மொட்டையன் புலவு பிரதேசத்திலேயே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இதுபற்றி தெரியவருவதாவது:

கடந்த 6ம்திகதி அதிகாலை நான்கு மணியளவில் கிராஞ்சி பகுதியிலுள்ள வீடொன்றினுள் புகுந்த இருவர் அங்கிருந்த 3 பிள்ளைகளின் தாயாரை பலாத்காரத்திற்கு உட்படுத்தியுள்ளனர். இதன்போது குறித்த பெண் பலமாக சத்தமிட்டதை தொடர்ந்து அயலவர் அங்கு கூடியுள்ளனர்.

இதனால் இனந்தெரியாத நபர்கள் இருவரும் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளனர். குறித்த வீட்டினுள் இராணுவத்தினர் அணியும் மேலங்கியொன்று கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.

அதனோடு அருகிலுள்ள பொலிஸ் மற்றும் இராணுவ முகாம்களில் தகவல் கொடுக்கப்பட்ட போதும் இதுவரைக்கும் எந்த விதமான நடவடிக்கைளும் எடுக்கப்படாத நிலையில் தகவல் வெளியில் தெரியக்கூடாதென சிலரால் தாம் மிரட்டப்படுவதாக மக்கள் கூறுகின்றனர்.

இவ்வாறான சம்பவங்கள் நாளுக்கு நாள் மீள்குடியேற்றப்பட்ட பிரதேசங்களில் அதிகரித்து வருகின்றன என்றும், மரண பயம் காரணமாக இப்படியான சம்பவங்கள் வெளிவருவதில்லை என்றும் அவர் மேலும் கூறினார்.

மேலும் எமது தளங்கள்:

ஈழத்து காணொளிகள்

ஆய்வுகள், கட்டுரைகள்

0 Responses to மூன்று பிள்ளைகளின் தாய் மீது படையினர் பாலியல் வல்லுறவு

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com