..இவர் தொடர்பிலோ அல்லது இவரின் உறவினர்கள் தொடர்பிலோ தகவல் தெரிந்தவர்கள் பூந்தோட்டம் புனர்வாழ்வு நிலைய பொலிஸ் அதிகாரிகளுடன் தொடர்பு கொள்ளுமாறு புனர்வாழ்வு நிலையப் பொலிஸார் கேட்டுள்ளனர்.
21 வயதான இவர் தனது சுய தகவல்களை வழங்கக்கூடிய நிலையில் தற்போது இல்லை எனவும் தனது தந்தையின் பெயர் ரமேஸ் என்றும் தாயாரின் பெயர் ராஜலெட்சுமி எனவும் தெரிவித்திருந்ததாகவும் நுவரெலியா லபுக்கலையை சேர்ந்ததாக கூறும் இவர் யாழ்ப்பாணத்தில் நல்லூர் ஆலயத்திற்கு முன்னால் உள்ள வீடொன்றில் தனது உறவினர்களுடன் தான் முன்னர் இருந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
சரளமாக சிங்களம் பேசத்தெரிந்துள்ள இவர் தொடர்பில் உறவினர்களோ அல்லது தந்தையோ பூந்தோட்டம் புனர்வாழ்வு நிலையத்தில் உள்ள பொலிஸ் பிரிவுடன் அல்லது பூந்தோட்டம் பொலிஸ் நிலையத்தின் 0718588008 என்ற இலக்கத்துடனும் தொடர்பு கொள்ள முடியும் என்பதுடன் இவர் தொடர்பிலான வழக்கு விசாரணை வவுனியா நீதிவான் நீதிமன்றில் 751/10 என்ற இலக்கத்தில் 09.12.2010 அன்று நடைபெறவுள்ளதால் நீதிமன்றத்திற்கு வந்தோ தகவல்களை வழங்கி இப்பெண்ணை அழைத்துச்செல்ல முடியுமெனவும் புனர்வாழ்வு நிலையப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.




0 Responses to உங்களுக்கு இவரை தெரியுமா?