Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

ஜே.வி.பியின் நாடாளுமன்ற உறுப்பினர் சுனில் ஹந்துன்நெத்தி மற்றும் கட்சியின் ஆதரவாளர்கள் நால்வர் சற்று முன்னர் வடதமிழீழ யாழ்ப்பாணத்தில் வைத்து தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளனர்.

இந்த சம்பவம், யாழ்ப்பாணம், கந்தர்மடம் பழம் வீதியில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பத்மினி சிதம்பரநாதனின் வீட்டில் வைத்து இடம்பெற்றுள்ளது.

தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்கள் மற்றும் காணாமல் போனோரின் விபரங்களை வெளியிடவேண்டும் எனக்கோரி நாளையதினம்நாம் இலங்கையர் இயக்கம்கையெழுத்து நடவடிக்கையை ஆரம்பிக்கவிருந்தது

இந்த நடவடிக்கைக்கு ஆதரவை கோரி, ஜே வி பி உறுப்பினர்கள் யாழ்ப்பாணத்தில் பல சந்திப்புக்களை நடத்தி வருகி;ன்றனர்

இந்தநிலையில் அவர்கள் முன்னாள் தமிழ்தேசியக்கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் பத்மினி சிதம்பரநாதனை சந்திக்க சென்ற போதே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

மூன்று அல்லது நான்கு உந்துருளிகளில் வந்த சீருடை அணிந்தோர் இந்த தாக்குதலை நடத்தியுள்ளனர்

இதன் போது பத்மினி சிதம்பரநாதன் அறை ஒன்றுக்குள் போய் ஒழிந்துகொண்டார். எனினும் தாம் நாடாளுமன்ற உறுப்பினர் என அடையாளப்படுத்திக்கொண்டு சுனில் ஹந்துன்நெத்தி முன்வந்த போது அவரின் தலையில் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது

இதனையடுத்து இதனை தடுத்த நால்வரும் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளனர். தாக்குலுக்கு உள்ளானவர்கள், யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றனர். இதனையடுத்து, அவர்கள் யாழ்ப்பாண பொலிஸில் முறைப்பாடுகளை மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் எமது தளங்கள்:

ஈழத்து காணொளிகள்

ஆய்வுகள், கட்டுரைகள்

0 Responses to பத்மினி சிதம்பரநாதன் வீட்டில் ஜேவிபியனர் மீது சிறிலங்கா புலனாய்துத்துறையினர் தாக்குதல்!

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com