Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

யேர்மனி வுப்பெற்றால் நகரில் 06.11.2010 பிரிகேடியர் சுப. தமிழ்ச்செல்வன் மற்றும் அவரோடு வீரச்சாவை தழுவிய ஆறு மாவீரர்களினதும் மூன்றாவது ஆண்டு நினைவு வணக்க நிகழ்வு மிகவும் எழுச்சியோடு நினைவு கூரப்பட்டது.

இவ்வணக்க நிகழ்வில் பொதுஈகச்சுடரினை பிரிகேடியர் சொர்ணம் அவர்களின் சகோதரர் திருமலைச்செல்வன் ஏற்றிவைக்க தொடர்ந்து மாவீரர் திருவுருவப் படங்களுக்கு யேர்மனியின் அனைத்து பகுதிகளிலும் இருந்து வருகை தந்த தமிழீழ உறவுகள் சுடர்வணக்கமும் மலர்வணக்கமும் செலுத்தினர்.

இவ்வெழுச்சி நிகழ்வில் யேர்மனி செந்தளிர் இசைக்குழுவின் எழுச்சிப்பாடல்கள் மண்டபம் நிறைந்திருந்த தமிழீழ மக்களின் மனங்களில் விடுதலை வேட்கையினை உணர்வுகளோடு ஊட்டியிருந்தன. தொடர்ந்து திரு திருக்குமரன் அவர்கள் நினைவுரை வளங்கியிருந்தார்.

தனதுரையில் யேர்மனியில் உருவாக்கப்படப் போகும் மக்களவையின் அவசியம் பற்றியும் அதனோடு அனைத்து தமிழர்களும் ஒரு குரலாக சிறிலங்காவின் இனப்படுகொலையினையும் போர்க்குற்றத்தினையும் அனைத்துலக சமூகத்திற்கு கொண்டு செல்ல வேண்டுமென்று தெரிவித்திருந்தார். நிகழ்வின் இடையே யேர்மனி தமிழ்மாணவிகளின் எழுச்சி நடனங்களும் கவிவணக்கமும் இடம்பெற்றன.

இந்நிகழ்விற்கு வருகை தந்திருந்த மதிற்புக்குரிய இமானுவேல் அடிகளார் சிறப்புரை ஆற்றியிருந்தார். இவ்வுரையில் தமிழர்களாகிய நாம் எல்லோரும் தூய்மையோடு மாவீரர்களை மனங்களில் நிறுத்தி அவர்கள் விட்ட பணியினை தொடர்ந்து முன்னெடுக்க வேண்டும் எனறு கூறினார்.

குறிப்பாக அடுத்தவர்களை குறை கூறாது ஒற்றுமையோடு நாம் எல்லோரும் தலைவரின் இலட்சியத்தினை முன்னெடுத்துச் செல்ல வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டுள்ளார். பிரிகேடியர் சுப. தமிழ்ச்செல்வன் அவர்களின் நினைவெழுச்சி நிகழ்வின் இறுதியில் தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம் என்ற தாரக மந்திரத்தினை எழுச்சியோடு ஒலித்த மக்களின் உணர்வுகளோடு நிறைவுபெற்றது.



0 Responses to யேர்மனியில் நடைபெற்ற சு.ப.தமிழ்ச்செல்வனின் நினைவுநாள் வணக்க நிகழ்வு (படங்கள் இணைப்பு)

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com