Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

தமிழ் மக்களின் வாழ்வில் முதன்மை பெற்ற மாதம் கார்த்திகை மாதம். எமது மாவீரரை, அவர்களின் புனிதமான தியாகங்களை நினைவு கூர்ந்து எழுச்சி கொண்டு எழும் மாதம் கார்த்திகை மாதம். எங்கள் மாவீரரின் கனவை நிவைவேற்றுவோம் என்று உறுதி எடுத்துக்கொள்ளும் மாதம் இக்கார்த்திகை மாதம்.

இக்கார்த்திகை மாதத்தில் மாவீரரை நினைவு கூறும் முகமாக பல மாவீரர் நாள் நிகழ்வுகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. அந்த வரிசையில், வெள்ளி நவம்பர் 19, 2010 ஆகிய இன்று, ரொறன்ரோ பல்கலைக்கழகம் இசுகாபுரோ வளாகத்தின் தமிழ் மாணவர் அமைப்பினால் மாவீரர் நாள் நிகழ்வு முன்னெடுக்கப்பட்டது. மீட்டிங் பிலேஸ் அரங்கத்தில் மிகவும் எழுச்சிகரமாக இடம்பெற்ற இந்நிகழ்வில் நூற்றுக்கணக்கான தமிழ் மற்றும் வேற்றினத்து மாணவர் கலந்து கொண்டனர்.

பிற்பகல் 6:30 மணிக்கு கனடிய மற்றும் தமிழீழத் தேசியக் கொடியேற்றங்களுடன் மாவீரர் நாள் நிகழ்வு தொடங்கியது. தொடர்ந்து, ஈகைச் சுடர் ஏற்றும் நிகழ்வு இடம்பெற்றது. இதனைத் தொடர்ந்து மாவீரருக்கு மலர் வணக்கம் செலுத்தப்பட்டது.

தொடர்ந்து, மாணவரால் நடனங்கள், பாடல்கள், கவிதைகள் உள்ளிட்ட பல எழுச்சிமிக்க நிகழ்வுகள் நிகழ்த்தப்பட்டன. ரொறொன்ரோ பல்கலைக்கழகத்தின் இசுகாபரோ வளாகத்தின் தமிழ் மாணவர் அமைப்பின் சார்பாகவும் தமிழ் இளையோர் அமைப்பு மற்றும் கனடியத் தமிழ் தேசிய மக்கள் அவை சார்பாகவும் உணர்வுமிக்க பேச்சுகள் வழங்கப்பட்டன. எமது மாவீரரின் தியாகங்களின் உன்னதம், எமது வரலாற்றுக் கடமை போன்ற கருத்துகள் இப்பேச்சுகளில் இடம்பெற்றன.

நிகழ்வின் நிறைவில் மாவீரரின் தமிழீழ இலட்சியத்தை நனவாக்க நாம் தொடர்ந்தும் போராடுவோம் என்று உறுதி மொழி எடுக்கப்பட்டது. கனடிய மற்றும் தமிழீழத் தேசியக் கொடி இறக்கத்துடன் பிற்பகல் 9:00 மணிக்கு மாவீரர் நாள் நிகழ்வு நிறைவு பெற்றது.











1 Response to ரொறன்ரோ பல்கலைக்கழக இசுகாபரோ மாணவர் முன்னெடுத்த மாவீரர் நாள் நிகழ்வு (காணொளி, படங்கள் இணைப்பு)

  1. இளமாறன் / இந்தியா
    உங்கள் போரட்டத்திற்க்கு‍ எனது‍ வாழ்த்துக்கள், உலக தமிழர்களின் அதரவு உங்களுக்கு‍ என்றம் உண்டு.

     

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com