Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

நவம்பர் மாதம் தமிழர் வாழ்விலும் தமிழீழ வரலாற்றிலும் முக்கியத்துவம் வாய்ந்த மாதமாகும். மாவீரர்களின் தியாகங்களை போற்றும்முகமாக கனடா தமிழ் இளையோர் அமைப்பு நவம்பர் மாதத்தை புனிதமாதமாக அறிவிக்கின்றது.

எமது தமிழீழ மண்ணுக்காகவும் தமிழ் மக்களுக்காகவும் லெப்டினன்ட் சங்கர் அண்ணா அவர்கள் அன்று தன்னை ஆகுதியாக்கி தமிழீழப் போராட்டத்தின் முதல் மாவீரர் ஆனார் .அன்று தொட்டு இன்றுவரை ஆயிரம்மாயிரம் மாவீரர்கள் தமிழீழ விடுதலைக்கு வித்திட்டு ஈழத்தமிழர் நெஞ்சில் அணையாத் தீபங்களாகிய மாவீரர்களை நினைவுகூறும் மாதம் நவம்பர் மாதமாகும்.

நவம்பர் மாதம் எமது தமிழீழ மண்ணுக்காய் மரணித்த மாவீரர்களை மனதில் நிறுத்தி அவர்கள் வழியில் தமிழர்கள் நிமிர்கின்ற மாதமாகும்.

மாவீரர்களின் உயரிய தியாகங்களே தமிழீழத்தின் உரமாக, தொடரும் போராட்டத்தை முன்னெடுக்கும் இளையோரின் உயிருக்குள் உறைந்திருக்கின்றன.

தமிழீழத்தின் எதிர்காலச் சந்ததியினர் சுதந்திரமாக சுயவுரிமையுடன் வாழ வேண்டும் என்பதற்காக உலகிலேயே உயர்ந்த கொடையான உயிர்கொடை அளித்து தமிழ் தேசிய சூரியப் புதல்வர்களான மாவீரர்கள் கந்தக மாதமான நவம்பரில் கெளரவிக்கப்படுகின்றனர்.

கொடிய இலங்கை அரசிடம் இருந்து புகலிடம் அளித்த எமது மாற்றாந் தாயான கனடா நாட்டிற்காக உயிர்நீர்த்த கனேடிய மாவீரர்களை நினவுகூரும் மாதமும் இவ் நவம்பர் மாதமேயாகும்.

இந்தவகையில் தமிழீழ விடுதலைக்கு வித்திட்டு ஈழத்தமிழர் நெஞ்சில் அணையாத் தீபங்களாகிய எம் சூரியப்புதல்வர்களை நினைவுகூர்ந்து, அவர்களின் தியாகங்களை போற்றும் முகமாக கனடா தமிழ் இளையோர் அமைப்பு, அனைத்து மாணவர் அமைப்புகளுடனும் இணைந்து நவம்பர் மாதத்தை மாவீரர் மாதமாக மனதில் கொண்டு அவர்களது நினைவு நிகழ்ச்சிகளை மேற்கொள்ளவிருக்கின்றது.

எனவே இப்புனிதமான மாதத்தில் மாவீரர் நினைவுபாடும் நிகழ்வுகள் அற்ற நிகழ்வுகளை தவிர்த்து வீரவேங்கைகளுக்கு மதிப்பளிக்குமாறு அனைத்து தமிழ் மக்களையும் தமிழ் இளையோர் அமைப்பு உரிமையுடன் வேண்டிநிற்கின்றது.

வீரத்தின் விளைநிலமாம் தமிழீழ மண் பெற்றெடுத்த எம் சுதந்திரச் சிற்பிகளின் அஞ்சலிக்காக எம் அகங்களில் மாவீரர்களின் அளப்பரிய தியாகங்களை நினைவுகூர்ந்து இக்காலபகுதியில் தமிழர்கள் தங்கள் வீடுகளிலும் ,வியாபார நிலையங்களிலும், கல்வி நிலையங்களிலும், மற்றும் நாம் ஒன்றுகூடும் இடங்களிலும் மாவீரர்களை போற்றி வணக்குவோம்

தமிழின வரலாறு கண்டிராத மாபெரும் அழிவுக்குள் சோகத்தினுள் மூழ்கிப்போயிருக்கும் தமிழீழ மக்களாகிய எங்களுக்கு மீண்டும் புத்துயிரளித்து விடுதலை பொறிமூட்டி தமிழீழத் தேசியப் பணியாற்றிடும் வல்லமையை அளிக்கும் மாவீரர் தியாகங்களை மனதில் கொண்டு தமிழீழ விடுதலை காண இளையோர் நாம் விரைவோமாக!

தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்

மேலும் எமது தளங்கள்:

ஈழத்து காணொளிகள்

ஆய்வுகள், கட்டுரைகள்

0 Responses to மாவீரர்களைப் போற்ற நவம்பரை புனித மாதமாக அறிவிப்பு: கனடா தமிழ் இளையோர்

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com