யாழ்ப்பாணத்தில் இன்று ஆரம்பமாகியுள்ள நல்லிணக்க ஆணைக்குழுவின் அமர்வுகளில் செய்தி சேகரிப்பதற்கு சிறிலங்கா அரசாங்கம் பிபிசிக்கு தடைவிதித்துள்ளது.சிறிலங்கா ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸ நியமித்துள்ள நல்லிணக்க ஆணைக்குழு இன்று தொடக்கம் யாழ்ப்பாணத்தில் நான்கு நாட்கள் அமர்வுகளை நடத்தி வருகிறது.
இந்த ஆணைக்குழுவின் அமர்வுகள் குறித்து செய்தி சேகரிப்பதற்கு பிபிசி செய்தியாளர்கள் யாழ்ப்பாணம் செல்வதற்கு பாதுகாப்பு அமைச்சிடம் அனுமதி கோரியிருந்தனர்.
அவர்களுக்கு பாதுகாப்பு அமைச்சு அனுமதி மறுத்துள்ளது.
சிறிலங்காவில் போருக்குப் பின்னரும் இறுக்கமான இராணுவ கட்டுப்பாட்டுக்குள் தான் மக்கள் வாழ்ந்து வருவதாகவும், வெளிநாட்டவர்கள் அங்கு செல்வதானால் பாதுகாப்பு அமைச்சின் அனுமதியைப் பெற வேண்டியுள்ளதாகவும் பிபிசி தெரிவித்துள்ளது.
நல்லிணக்க ஆணைக்குழு பற்றிய செய்திகளை சேகரிப்பதற்கு வடபகுதி செய்வதற்கு பிபிசிக்கு இரண்டாவது தடவையாக சிறிலங்கா அரசு தடைவிதித்துள்ளது.
ஏற்கனவே வன்னியில் நடைபெற்ற அமர்வின் போது செய்தி சேகரிக்கவும் பிபிசிக்கு தடைவிதிக்கப்பட்டிருந்தது.
இதேவேளை இதுவரை அரசிடம் பதிவு செய்து கொள்ளாத நிறுவனங்கள் உடனடியாக பாதுகாப்பு அமைச்சகம் மற்றும் அரச சார்பற்ற நிறுவனங்களுக்கான செயலகத்தில் பதிவு செய்து கொள்ள வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் இப்படி பதிவு செய்து கொள்ளும் நிறுவனங்கள் அரசால் எழுத்துபூர்வமாக கேட்கப்படும் கேள்விகளுக்கு பதிலளிக்க வேண்டும் எனவும் கூறப்பட்டுள்ளது.
இந்த உத்தரவு அரச சார்பற்ற நிறுவனங்கள் மீது அரசு கொண்டுள்ள சந்தேகத்தை வெளிப்படுத்துவதாகவே கருத வேண்டியுள்ளது என்று தன்னார்வ தொண்டு அமைப்புகள் கருத்து வெளியிட்டுள்ளன.



0 Responses to யாழ்ப்பாணத்தில் நடைபெறும் விசாரணைகளை பார்வையிட பிபிசிக்கு மீண்டும் தடைவிதிப்பு