Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

காணாமல் போன உறவினர்களைத் தேடித் தருவதாகத் தெரிவித்து வடதமிழீழ மக்களிடம் பணம் பறிக்கப்படுவதாக லக்பிம சிங்களப் பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.

காணாமல் போனவர்களின் உறவினர்கள் பணம் பறிக்கும் கும்பலொன்று திட்டமிட்ட வகையில் செயற்பட்டு வருவதாக வவுனியா மன்னார் பிரதேசங்களுக்குப் பொறுப்பான ஸ்ரீலங்கா பிரதிக் காவல்துறை மா அதிபர் பிரசந்த நாணயக்கார கூறியுளளார்.

இந்தக் குற்றச் செயல்களுடன் யாழ்ப்பாண மாவட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவருக்கு தொடர்பு இருப்பதாக சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

குறித்த ஸ்ரீலங்கா நாடாளுமன்ற உறுப்பினர் காணாமல் போனவர்களின் உறவினர்களுக்கு ஸ்ரீலங்கா இராணுவ மேஜர் ஒருவரின் கையடக்கத் தொலைபேசி இலக்கமொன்றை கொடுத்து அதனுடன் தொடர்பு கொண்டு தகவல்களைப் பெற்றுக் கொள்ளுமாறு தெரிவித்துள்ளதாக ஸ்ரீலங்கா பிரதிக் காவல்துறை மா அதிபர் குறிப்பிட்டுள்ளார்.

இந்தத் தொலைபேசி இலக்கத்திற்கு அழைப்பை ஏற்படுத்திய சிலர் இந்த மோசடியில் சிக்கியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

காணாமல் போன உறவினர் ஒருவரை மீட்பதற்காக குறித்த தொலைபேசி இலக்கத்துடன் தொடர்பு கொண்ட உறவினர் ஒருவர் 375000 ரூபா பணத்தை செலுத்தியதாகக் குறிப்பிடப்படுகிறது.

இவரிடம், இலக்கத் தகடற்ற உந்துருளியில் வந்தவர்கள் பணத்தை பெற்று சென்றதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த சம்பவம் குறித்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினரிடமும் விசாரணை நடத்தப்படவுள்ளதாக லக்பிம சிங்கள நாளிதழ் குறிப்பிட்டுள்ளது.

மன்னாரிலும் இதேபோன்று காணாமல் போன உறவினர் ஒருவரை தேடுவதற்காக நபர் ஒருவர் பணம் வழங்கியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

பொரளைப் பிரதேசத்தைச் சேர்ந்த பாதாள உலக குழுத் தலைவர் ஒருவரின் மனைவியின் கணக்கில் இந்தப் பணம் வைப்பிலிடப்பட்டுள்ளது.

எனவே இனந்தெரியாத நபர்களிடம் பணம் கொடுக்க வேண்டாம் என்று ஸ்ரீலங்கா காவல்துறையினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

காணாமல் போனவர்களை மீட்டுத் தருவதாக அறிவிக்கப்பட்டு வழங்கப்பட்ட தொலைபேசி இலக்கம் தற்போது பாவனையில் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த சம்பவத்துடன் ஸ்ரீலங்கா நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவருக்கு தொடர்பிருப்பதாக லக்பிம செய்தி வெளியிட்டுள்ள போதும் அவருடைய பெயர் விபரங்கள் எவையும் அந்த செய்திதாளில் வெளியிடப்படவில்லை.

மேலும் எமது தளங்கள்:

ஈழத்து காணொளிகள்

ஆய்வுகள், கட்டுரைகள்

0 Responses to காணாமல் போனவர்களின் உறவினர்களிடம் பணம் பறிக்கும் அரச அதிகாரிகள்

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com