தமிழ்நாட்டில் தமிழனைத் தவிர அனைவரும் தமிழினத் தலைவர்கள்தாம் , அந்தத் தலைவர்களால் நமக்கான உரிமைகளை பெற்றுத்தரமுடியாது.
ஏனனில் அவர்கள் தமிழரல்லர் ! நண்பன் யார் ? எதிரி யார் ? என அடையாளம் காணமுடியாதபடி தமிழினம் மாயைகளில் மயக்குண்டு கிடக்கின்றது.
ஈழம் வீரம் நிறைந்த மண்தான். அந்த மண்ணின் மாவீரர்களுக்கு நம்மால் மௌன அஞ்சலி மட்டுமே செலுத்த முடியும் , அதுவும் அரசின் அனுமதி பெற்றபிறகுதான் ! ஏனனில் இது தமிழ்நாடுதான் ஆனால் தமிழர்களுக்கான நாடல்ல . இது எதைக் காட்டுகிறது. தமிழன் தன்னை ஆளவில்லை , வந்தாரைஎல்லாம் வாழவிட்டு ஆளவிட்டு அழகு பார்க்கிறது தமிழினம்.
முள்ளி வாய்க்கால் நிகழ்வுகளுக்குப் பின்பும் அவர்களைத்தான் நம்புகிறது தமிழினம் . தன்னால் எதாவது செய்ய முடியுமா என ஏங்கும் ஒரு சில தமிழர்களும் இந்தி வல்லாண்மை கூட்டாச்சி அரசால் தளைப்படுத்தப்படுகின்றனர் .எழுத்துரிமை பேச்சுரிமை மறுக்கப் படுகிறது. இளைஞர்கள் தங்களின் எதிர்காலம் குறித்து கவலை கொள்வதால் தமிழர்களின் பொதுவான சிக்கல்களைத் தீர்க்க தோள்கொடுக்க தயங்குகின்றனர்.
காரணம் ஆயிரக்கணக்காக சொல்லலாம் . தமிழக அரசின் அச்சுறுத்தல்கள் நேரிடையாகவும், மறைமுகமாகவும் தோற்றுவிக்கப்படுகின்றன. தமிழர் அல்லாதோரை தலைவனாக ஏற்றுக்கொள்ளும் மன நிலைக்கு தமிழன் தள்ளப்பட்டுள்ளான்.
உண்மைகளை உரக்கச் சொல்லும் பாவலர் காசியானந்தனின் பாடல் வரிகளும், தமிழரை எழுச்சிகொள்ளச் செய்யும் புலவர் செம்பியனின் கவிதை வரிகளும், அறிஞர் குணா , போன்றோரின் எழுத்துகளும் தமிழினத்தை தலை நிமிரச் செய்யவல்லன . ஆயினும் ஊடகங்களின் கயமைத் தனத்தால் உண்மைகளை தமிழர்கள் அறிய முடியா வண்ணம் சிந்தனை மழுங்கி வாழ்கின்றனர்.
காலம் மாறும், காட்சிகளும் மாறும் இது இயங்கியல் விதி . வரலாற்றை ஒன்றின் ஊடாக ஒன்றை மீளாய்வு செய்ய வேண்டும். அவற்றின் ஊடாக நாம் நம்மை அடையாளப்படுத்தி நமக்கான உரிமைகளை பெறுவோம், ஆட்சியதிகாரத்தை கைப்பற்றுவோம்! தமிழகத்தின் அரசியல் சிக்கல்களுக்கு தீர்வு காண தமிழர்கள் ஓரணியில் திரள்வோம். தமிழர் நாட்டை தமிழர்தானே ஆளவேண்டும் . இந்த நன்னாளில் அதற்கான உறுதிமொழியை ஒவ்வொரு தமிழரும் ஏற்போம் . தமிழ்நாடு தமிழர்கே ! இருப்பதை காப்போம்! இழந்ததை மீட்போம்!!
- மா.முருகானந்தம்,
ஓவியன் . கரூர்.
காணொளிகள்.
56வது அகவை காணும் தேசியத் தலைவர் காணொளிகள்.
மாவீரர் காணொளிகள்.



0 Responses to மாண்ட வீரர்களின் கனவு பலிக்கும், நாளை நமது ஈழம் பிறக்கும்! நம்பிக்கை மிகுந்த இந்த வரிகள் நமக்கு உணர்த்துவதென்ன?