தமிழினம் காக்க தன்னுயிரை ஈந்த மாவீர்களின் சிறப்பைபோற்றும் வகையிலும் வீரவணக்கம் செலுத்தும் வகையிலும் நாம் தமிழர் கட்சியினர் அனைவரும் மாவீரர் நாள் கடைபிடிக்கிறோம்.
இந்நிகழ்விற்கான சில ஒழுங்குமுறைகள் நாம் தமிழர் தலைமை செயலகத்தால் தெரிவிக்கப்பட்டுள்ளது. கட்சி நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் அனைவரும் இவற்றை கடைபிடிக்கும்படி கேட்டுகொள்ளப்படுகிறது
மாவீரர் நிகழ்வுகளுக்கான அலங்காரங்கள், சமூக சமய, அரசியல் சார்ந்ததாக இருக்காமல், சிவப்பு மஞ்சள் நிறங்களைப் பிரதிபலிப்பதாக அமைதல் வேண்டும் என கேட்டுகொள்ளப்படுகிறது.
கடைபிடிக்க வேண்டிய நிகழ்வுகள்
பொதுச்சுடர்
வீரவணக்கம்
ஈகைச்சுடர்
மலர்வணக்கம்
அகவணக்கம்
வீரவணக்க உரை
உறுதியுரை
நினைவுரை
மாவீரர் நாள் நிகழ்வுகள் அனைத்திலும் ஈகைச்சுடர் ஏற்றுதல் கட்டாயமாகும்.
மங்கள விளக்கு ஏற்றக்கூடாது.
அகவணக்கத்திற்கு நேரம் குறிக்கக்கூடாது.
மேசைவிரிப்பு, பீட விரிப்புகளுக்கு சிகப்பு மஞ்சள் துணியாகவே இருத்தல் வேண்டும். வெள்ளை விரித்தலைத் தவிர்த்தல் நன்று.
தவிர்க்க வேண்டியவை
அஞ்சலி, மௌன வணக்கம், மலரஞ்சலி, மங்கள விளக்கு, அஞ்சலியுரை, அஞ்சலிக்கூட்டம்.
மாவீரர் படங்களுக்கு அருகில் கட்சிக்கொடி வைப்பதை தவிர்க்கவும்.
-
இப்படிக்கு
தடா. ராசா
தலைமை செயலர்
நாம் தமிழர் கட்சி.
அறிவிப்பு: மாவீரர் நாள் - கட்சி நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்களுக்கு
பதிந்தவர்:
ஈழப்பிரியா
24 November 2010



0 Responses to அறிவிப்பு: மாவீரர் நாள் - கட்சி நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்களுக்கு