Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

குவல்ப் ஹம்பர் பல்கலைக்கழகத்தின் தமிழ் மாணவர் அமைப்பினால் ஏற்பாடு செய்யப்பட்ட மாவீர்ர் தின நிகழ்வு 17ம் திகதி புதன்கிழமை மாலை ஆறு மணியிலிருந்து ஒன்பது மணிவரை நடைபெற்றது.

கனேடிய தேசியக்கீதம் இசைக்கப்பட்டு நிகழ்வுகள் ஆரம்பிக்கப்பட்டன. அதனைத்தொடர்ந்து தமிழீழ கொடிக்கீதம் இசைக்கப்பட்டது. அடுத்த தாக ஈகைச்சுடர் ஏற்றப்பட்டது. அதன்பின் அங்கு வருகைதந்திருந்த மாணவர்கள் மலர்தூவி மாவீர்ர்களுக்கு தமது அஞ்சலியையும் வணக்கத்தையும் தெரிவித்தனர். இதன் பின்னர் மாணவர்களால் ஓழுங்குசெய்யப்பட்ட எழுச்சி நடனங்கள் பேச்சுக்கள் பாடல்கள் மற்றும் நாடகங்கள் இடம்பெற்றன.

பெருமளவு மாணவர்களின் பங்களிப்புடன் உணர்வுபூர்வமாக நடைபெற்ற மாவீர்ர் தின நிகழ்வு இந்த ஆண்டே முதன்முறையாக இந்தப் பல்கலைக்கழகத்தில் நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிகழ்வானது புலம்பெயர் வாழ் தமிழ் இளைஞர்களின் விடுதலை உணர்வு நீர்த்துப்போகவில்லை என்பதற்கு ஒரு சான்றாக இருந்தது.







0 Responses to கனடா குவல்ப் ஹம்பர் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற மாவீரர் நாள் நிகழ்வு (படங்கள் இணைப்பு)

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com