Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

விடுதலைப்புலிகள் அமைப்பை பயங்கரவாத அமைப்புகளின் பட்டியலில் தொடர்ந்தும் உள்ளடக்கியிருப்பதன் மூலமாக புலிகள் மீதான தடையை அமெரிக்கா நீடித்துள்ளது.

அமெரிக்க இராஜாங்கத் திணைக்களம் இன்றைக்கு வெளியிட்டுள்ள பயங்கரவாத அமைப்புகளின் பட்டியலில் மொத்தம் 47 அமைப்புகள் உள்ளடக்கப்பட்டுள்ளன. அதன் அகர வரிசையில் விடுதலைப்புலிகள் இயக்கம் 25 இடத்தில் பட்டியலிடப்பட்டுள்ளது.

பிரஸ்தாப பட்டியலில் உள்ளடக்கப்பட்டுள்ள அனைத்து அமைப்புக்களும் அமெரிக்காவில் தடைசெய்யப்பட்ட அமைப்புக்களாக கருதப்படுவதுடன், அமெரிக்காவிற்குள் அந்த இயக்கங்களுக்குச் சார்பான எந்த நடவடிக்கைகளையும் மேற்கொள்ள முடியாது.

விடுதலைப் புலிகளுடனான போருக்குப் பின் அரசியல் செயற்பாடுகளில் மட்டுமே ஆர்வம் காட்டிவரும் விடுதலைப்புலிகள் அமைப்பின் மீதான அமெரிக்கத் தடையானது மேலும் நீடிக்கப்பட்டிருப்பதானது நடுநிலை மக்களைப் பொறுத்தவரை பெரும் ஏமாற்றமாக உணரப்படுகின்றது.

0 Responses to அமெரிக்காவில் விடுதலைப் புலிகள் அமைப்புக்கு தொடர்ந்தும் தடை

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com