Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

04.11.1999 அன்று ஓயாத அலைகள் 3 படைநடவடிக்கையில் ஒதியமலை பகுதி மீட்பின் போதான சமரில் வீரச்சாவைத் தழுவிக் கொண்ட விக்ரர் கவச எதிர்ப்புப் படையணியின் தளபதிகளில் ஒருவரான லெப்.கேணல் மணிவண்ணனின் 11ம் ஆண்டு நினைவு நாளும், கிளாலிப் பகுதியில் சிறிலங்கா படையினருடன் நடைபெற்ற மோதல் ஒன்றில் வீரச்சாவைத் தழுவிக் கொண்ட லெப்.கேணல் தர்சனின் 10ம் ஆண்டு நினைவு நாளும், 04.11.2007 அன்று வீரச்சாவைத் தழுவிக் கொண்ட லெப்.கேணல் அசோக்குமாரின் 3ம் ஆண்டு நினைவு நாளும் இன்றாகும்.

ஓயாத அலைகள் – 3 படைநடவடிக்கையில் 04.11.1999 அன்று வீரச்சாவைத் தழுவிக் கொண்ட சாள்ஸ் அன்ரனி படையணியைச் சேர்ந்த மேஜர் இராசநாயம், லெப். ஆருரான், 2ம். லெப். திருக்குமரன் 2ம் லெப். வல்லவன், 2ம் லெப். சுபாசன், வீரவேங்கை தீபன் உட்பட்ட மாவீரர்களின் 11 ம் ஆண்டு நினைவு நாளும்

04.11.2000 அன்று திருகோணைமலைத் துறைமுக வாயிலில் வைத்து சிறிலங்கா கடற்படையின் டோறா அதிவேக பீரங்கிக் கலத்தினைச் சேதமாக்கி வீரச்சாவைத் தழுவிக் கொண்ட கடற்கரும்புலிகள் லெப்.கேணல் நரேஸ், மேஜர் சுடர்மணி(செங்கதிர்) ஆகியோரின் 10ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்.



தமிழீழ தாயக விடுதலைக்காய் தமது இன்னுயிரை ஈந்த இந்த வீரமறவர்களிற்கு எமது வீரவணக்கங்கள். இதே நாளில் வீரச்சாவைத் தழுவிய ஏனைய மாவீரர்களிற்கும் எமது வீரவணக்கங்கள்.







மேலும் எமது தளங்கள்:

ஈழத்து காணொளிகள்

ஆய்வுகள், கட்டுரைகள்

0 Responses to லெப்.கேணல் நரேஸ், மேஜர் சுடர்மணி, லெப்.கேணல்கள் மணிவண்ணன், தர்சன், அசோக்குமார் ஆகிய மாவீரர்களின் வீரவணக்க நாள்

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com