நேற்று முன்தினம் பேர்மிங்காம் விக்ரோறியா ஸ்குயாரில் ஆரம்பமான இந்த நடைபயணம் 53 மைல்களை (85 கிலோ மீற்றர்கள்) தாண்டி மில்ரன் கெயின்ஸ் எனும் இடத்தை நோக்கி சென்றுகொண்டிருக்கிறது.
முதல் நாளான செவ்வாய்க்கிழமை காலை 10:30 க்கு பேர்மிங்காம் இல் இருந்து ஆரம்பமான நடைபயணம் மாலை 6:30 க்கு கவன்றியில் வோர் மெமோறியல் பார்க்கை சென்றடைந்திருந்தது. அங்கிருந்து நேற்று காலை 9:00 மணிக்கு போர்வீரர்களை நினைவுகொர்ந்து அகவணக்கம் செலுத்தி அங்கிருந்தவர்கள் மத்தியில் இந்த நடைபயணம் தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்தும் துண்டுப்பிரசுர வினியோகம் இடம்பெற்றது.
இந்த இரண்டாம் நாள் ஆரம்ப நிகழ்வில் Coventry Deputy Mayor Kieran Mulhall அவர்கள் கலந்துகொண்டு நடைபயணம் மேற்கொள்பவர்களை வாழ்த்தி ஆரம்பித்து வைத்தார்.
கவன்றியில் இருந்து சரியாக காலை 9:30 மணிக்கு ஆரம்பமான இரண்டாம் நாள் நடைபயணம் 19.6 மைல்களை (32 கிலோ மீற்றர்) கடந்து மாலை 6:10 க்கு டவன்றி எனும் இடத்தை சென்றடைந்தது. அங்கு இவர்களை வரவேற்க அப்பகுதியை சேர்ந்த Rev. Jay Phelps அவர்களும் தமிழ் மக்கள் பலரும் காத்திருந்து வரவேற்றனர். Rev. Jay Phelps அவர்கள் தனது வீட்டிலேயே நடைபயணம் மேற்கொண்ட ஐவருக்கும் தங்குமிட வசதியும் இராபோசனமும் வழங்கி கெளரவித்தார்.
இன்று காலை அங்கிருந்து டவன்றி வோர் மெமோறியல் வரை சென்று அங்கு போர்வீரர்களை நினைவுகூர்ந்து அகவணக்கம் செலுத்தி தமது மூன்றாம் நாள் நடைபயணத்தை ஆரம்பித்துள்ளனர்.
இன்று காலை 9:00 மணிக்கு ஆரம்பமான இந்த நடைபயணம் பி.ப 1:00 மணிக்கு 12 மைல்களை (19 கிலோ மீற்றர்) தாண்டி மில்ரங்கெயின்ஸ் எனும் இடத்தை நோக்கி சென்றுகொண்டிருக்கிறது.
கடந்த மூன்று நாட்களாக தொடரும் இந்த நடைபயணத்தில் திரு. ஜோகணேஸ், திரு. நிமலன், திரு. மொறிஸ், திரு, சிறீறஞ்சன் ஆகியோர் தொடர்ந்து நடந்துவருகின்றனர். இவர்களுடன் இன்று திரு. சுதா, திரு. நிக்சன், திரு. வசி ஆகியோர் இவர்களுக்கு ஊக்கம் கொடுக்கும் முகமாக தாமும் நடந்து வருகின்றனர்.
இன்றைய நடைபயணத்தில் மில்ரங்கெயின்ஸ் எனும் இடத்தை சென்றடையும் இந்த நடைபயணமானது நாளை காலை அங்கிருந்து புறப்பட்டு லூட்டனை சென்றடையவுள்ளதோடு இறுதி நாளான ஞாயிற்றுக்கிழமை மாலை 6:00 மணியளவில் 117 மைகள் (188 கிலோ மீற்றர்) கடந்து லண்டன் வெஸ்மினிஸ்ர் பகுதியை சென்றடையவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இந்த நடைபயணம் மேற்கொள்பவர்களை ஊக்குவிக்க அவர்களுடன் சேர்ந்து சிறு சிறு தூரங்களேனும் நடக்க விரும்புபவர்களும், அல்லது அவர்கள் சென்றடையும் இடங்களில் அவர்களை வரவேற்கவோ ஒன்றிணையுமாறும், இதுதொடர்பான மேலதிக விபரங்களுக்கு தம்முடன் எனும் தொலைபேசி இலக்கத்தி தொடர்புகொள்ளுமாறும் ஏற்பாட்டாளர்கள் கேட்டுக்கொண்டுள்ளனர்.








0 Responses to பிரித்தானிய தமிழர்களின் மூன்றாவது நாளாக தொடரும் "ஹாட் டு ஹாட்" நடைபயணம் (படங்கள் இணைப்பு)