Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

படைவீரர் குடும்பங்களின் மூன்றாவது பிள்ளைக்கு ஒரு லட்ச ரூபா வழங்கப்பட உள்ளதாக அரசாங்கம் அறிவித்துள்ளமை நகைப்பிற்குரியதென பொன்சேகா தெரிவித்துள்ளார்.

இம்முறை வரவு செலவுத்திட்டத்தில் குறிப்பிடப்பட்ட மிகப் பெரிய நகைச்சுவையாக இதனைக் கருத வேண்டுமென அவர் தெரிவித்துள்ளார்.

வெள்ளைக் கொடி வழக்கு தொடர்பான விசாரணைகளில் கலந்து கொண்டு திரும்பிய போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

ஆயிரம் படையதிகாரிகளின் குடும்பங்களில் எவருக்கும் மூன்று பிள்ளைகள் கிடையாதென அவர் தெரிவித்துள்ளார்.

இந்த வரவு செலவுத் திட்டத்தை ஒர் நகைச் சுவையான வரவு செலவுத் திட்டமாக கருத வேண்டுமென அவர் குறிப்பிட்டுள்ளார்.

0 Responses to படைவீரரின் மூன்றாவது பிள்ளைக்கு ஒரு லட்சம் நகைப்பிற்குரியது: பொன்சேகா

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com