நாளை நவம்பர் 27ஆம் திகதி, தமிழீழ விடுதலைப் புலிகளின் மாவீரர் நாள். அதனையொட்டியச் செய்திகளை வெளியிட்டு யாழ்ப்பாண மக்களைக் குழப்ப வேண்டாம் என்று நேற்றிரவு யாழ். குடாநாட்டுப் பத்திரிகைகள் மூன்றுக்கு அனாமதேய மிரட்டல் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.இது பற்றி தெரியவருவதாவது:
நேற்று வியாழக்கிழமை இரவு யாழ். பிரபல பத்திரிகை அலுவலகம் ஒன்றிற்கு மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் பாதுகாப்பு ஊழியரிடம் இது தொடர்பான அநாமதேய மிரட்டல் கடிதத்தைக் கொடுத்து விட்டுச் சென்றனர்.
அக்கடிதத்தில், தற்போது யாழ்.குடாநாட்டில் தமிழ் மக்கள் சந்தோசமாக வாழ்கின்றனர். இந்த நிலையைக் குழப்ப நீங்கள் முயற்சி எடுக்க வேண்டாம்.சுயாதீனமாக மக்களுக்குச் செய்தி கொடுக்கும் நீங்கள்,
இப்போது இருக்கும் சமாதானச் சூழ்நிலையைக் குழப்பும் வகையில் இந்த முறை மாவீரர் நாளுக்கு விடுதலைப்புலிகள் இயக்கச் செய்தி எதையும் பிரசுரிக்க வேண்டாம். அப்படிப் போட்டால் உங்கள் அலுவலகம் கொளுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.
எழுத்துப் பிழைகளுடனும் வசனப் பிழைகளுடனும் எழுதப்பட்டிருந்த அந்தக் கடிதம் குடாநாட்டில் வெளிவரும் மூன்று பிரபல பத்திரிகைகளின் அலுவலகங்களுக்கும் அனுப்பப்பட்டிருந்தது.
சந்தோசமாக வாழுகின்ற யாழ். குடாநாட்டு மக்கள் என்ற பெயரிலேயே இந்தக் மிரட்டல் கடிதங்கள் அனுப்பப்பட்டிருந்தன.
புலிகளின் தலைவர் பிரபாகரனின் பிறந்த நாள், மாவீரர் நாள் ஆகியவைகளை முன்னிட்டு குடாநாட்டில் பாதுகாப்பும் பலப்படுத்தப்பட்டுள்ளன. படையினர் நேற்றுப் பல இடங்களில் வீதிச் சோதனை, ரோந்து நடவடிக்கைகளையும் மேற்கொண்டுள்ளனர். என அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
காணொளிகள்.
56வது அகவை காணும் தேசியத் தலைவர் காணொளிகள்.
மாவீரர் காணொளிகள்.



0 Responses to விடுதலைப் புலிகளின் மாவீரர் நாள் செய்திகளை வெளியிடக்கூடாது: யாழில் மிரட்டல்