பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஷ புதிதாக சிங்களப் பத்திரிகையொன்று தொடங்கவுள்ளதாக அவருக்கு நெருக்கமான வட்டாரங்களிலிருந்து தெரிய வருகின்றது. அதற்கென அவர் சுமார் 250 மில்லியன் ரூபாவை ஒதுக்கியுள்ளாராம்.ஆயினும் அதன் உரிமையாளர் தானே என்பதை அவர் வெளிக்காட்டிக் கொள்ளப் போவதில்லை என்பதுடன், பிரதமர் பதவிக்குப் பொருத்தமானவர் அமைச்சர் பசில் தான் என்பதை மக்கள் மத்தியில் பரப்புவதே பத்திரிகையின் பிரதான பணியாக இருக்கும் என்றும் தெரிய வருகின்றது.
அதன் பிரகாரம் பிரதமர் பதவியில் தனக்குப் போட்டியாக இருக்கும் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் மூத்த அமைச்சர்கள், ஐக்கிய தேசியக் கட்சியிலிருந்து கட்சி மாறிய எஸ்.பி. திசாநாயக்க போன்றோரை பிரஸ்தாப பத்திரிகை வெளுத்து வாங்கும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.
அதற்கு வசதியாக குறித்த பிரமுகர்களின் கடந்த காலத் தவறுகள் பற்றிய பைல்களை அமைச்சர் பசில் தன் வசம் வைத்துக் கொண்டுள்ளதுடன், மேலதிக தகவல்களையும் சேர்த்துக் கொண்டிருக்கின்றார் என்றும் கூறப்படுகின்றது.
ஆயினும் கிணறு வெட்டப் பூதம் கிளம்பிய கதையாக அமைச்சர் பசிலின் பத்திரிகை நீறு பூத்த நெருப்புப் போன்றிருக்கும் அரசாங்கத் தரப்பினருக்கிடையிலான கருத்து முரண்பாட்டை மேலும் தீவிரப்படுத்தி விடுமோ என்றும் சிலர் அச்சம் தெரிவித்துள்ளனர்.
மேலும் எமது தளங்கள்:
ஈழத்து காணொளிகள்
ஆய்வுகள், கட்டுரைகள்



0 Responses to பசில் பத்திரிகை ஆரம்பிக்கின்றார்: பிரதமர் பதவிக்கான அடித்தளம்..?