Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

அரசாங்கத்துக்கும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் இடையிலான இறுதிக்கட்ட யுத்தத்தின் போது பொதுமக்களை தமிழீழ விடுதலைப் புலிகள் மனிதக் கேடயங்களாக பயன்படுத்தியதாக யாழ் மாவட்ட அரச அதிபர் திருமதி இமெல்டா சுகுமார் தெரிவித்துள்ளார். ஜனாதிபதியால் நியமிக்கப்பட்ட கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு முன்னிலையில் இன்று சாட்சியமளிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார். சர்வதேச தொலைக்காட்சியான பி.பி.சி முன்னிலையில் இவர் இவ்வாறானதொரு பாரதூரமன குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார்.

தமிழீழ விடுதலைப் புலிகள் தமது அனுமதியின்றி அரச படையினரிடம் சரணடையச் சென்ற பொதுமக்களை புலிகள் சுட்டுக்கொன்றனர். ஆனால் இராணுவத்தினர் ஒரு போதும் சரணடைய வந்த மக்களை சுடவில்லை. இராணுவத்தினர் மக்களை சரணடையுமாறே கோரினார்கள் என்று அப்பட்டமாகப் பொய்யுரைத்துள்ளார் அரசாங்க அதிபர். சமீபத்தில் எழிலனின் மனைவி கொடுத்த சாட்சிகங்களை விட முற்றிலும் மாறுபட்டதாக இது அமைந்துள்ளது. சரணடையச் சென்ற எவரையும் இராணுவம் சுடவில்லை என்றால், புலித்தேவன், நடேசன் போன்றோரை என்ன அமெரிக்க இராணுவமா வந்து சுட்டுவிட்டுச் சென்றது ?

40,000 பொது மக்கள் முள்ளிவாய்க்காலில் இறந்ததை மறந்து, நூற்றுக்கணக்கான பெண்கள் மானபந்தப்படுத்தப்பட்டு, பல பெண்கள் கற்பழிக்கப்பட்டு, போராளிகளின் கைகளைக் கட்டி படுகொலைசெய்த இலங்கை இராணுவத்திற்கு ஆதராவாக வக்காளத்துவாங்கும் இமெல்ட்டா சுகுமாரும் ஒரு தமிழ்பெண்தானா ? கேவலம் ஒரு பதவிக்காக, இறந்த தமிழர்களை கொச்சைப்படுத்தி, மகிந்தவின் கால்களை நக்கித் பிழைப்பதை விட நாண்டுகெட்டு சாகலாம் !

யுத்தத்தின் போது இராணுவத்தினர் மக்களுக்கள் நிறைய உதவிகளை மேற்கொண்டனர். அத்தியவசிய திணைக்களத்திடமிருந்து திருகோணமலையிலிருந்து முல்லைத்தீவுக்கு கப்பல் மூலம் பொருட்கள் அனுப்பப்பட்டன என்றும், அப்போது கறுப்பு நிற வாகனமொன்றில் விடுதலைப் புலிகள் அக் கப்பலை காத்துக்கொண்டிருந்ததாக சிலர் என்னிடம் தெரிவித்தனர் என்று கூறியிருக்கிறார் இமெட்டா. அரசாங்கத்தால் அனுப்பப்பட்ட பொருட்களில் 80% மக்களை சென்றடைந்தன. ஏனைய 20% தொடர்பில் எனக்கு எதுவும் தெரியாது என்றும் கூறியுள்ளார் இமெல்ட்ட.

அப்படியானால் மக்கள் ஏன் கஞ்சிக்கா வரிசையில் நின்றிருக்கவேண்டும். அவ்வாறு கூடி நின்ற மக்கள் மீதும் ஒரு முறை விமானக்குண்டு வீச்சு நடந்ததை கடந்த வருடம் மே மாதம் அதிர்வு இணையம் பிரசுரித்திருந்தது. முள்ளி வாய்க்கால் என்பது ஒரு வெட்ட வெளி, கடற்கரை மணல், அங்கே கறுப்பு நிற விடுதலைப் புலிகளின் வாகனம் நின்றிருந்தது என்று கூறுவது அப்பட்டமான பொய், அம்புலிமாமா கதை கூறுவதுபோல உள்ளது. அந்த வெட்டவெளியில் கறுப்பு நிற வாகனத்தை ஓட்டிச் சென்றால் நிச்சயம் வான் தாக்குதலுக்கு உள்ளாகும் என விடுதலைப் புலிகளுக்கு மட்டும் அல்ல சிறு பிள்ளைக்குக் கூட அது தெரிந்திருக்கும். இறுதி யுத்த நேரத்தில் கடற்கரை மனல் மேல் ஓடக்கூடிய மேட்டார் சைக்கிளையே புலிகள் பெரிதும் பயன்படுத்தினர்.

மற்றும் புலிகள் தம்மிடம் இருந்த உணவுக் கையிருப்பில் இருந்தே, கஞ்சியைக் காச்சி மக்களுக்கு வழங்கிவந்தனர் என்பது யாவரும் அறிந்த விடையம். பதுங்கு குழிகளை விட்டு வெளியே வரமுடியாது 24 மணி நேரமாக, அங்கேயே இருந்து, தமது சிறுநீரகத்தையே குடித்து சில நாட்களை கழித்த நபர்கள் கூட இருக்கிறார்கள். யுத்தம் இடம்பெற்றவேளை அரசாங்கம் மட்டுமே உதவியதாகத் தெரிவித்துள்ள இமெல்ட்ட சுகுமார், சர்வதேச தொண்டு நிறுவனங்கள் எதுவித உதவிகளையும் செய்யவில்லை எனக் கூறியுள்ளார்.

0 Responses to நல்லிணக்க ஆணைக்குழு முன் நாடகம் ஆடும் இமெல்டா சுகுமார்

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com