Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

நாடு கடந்த தமிழீழ இராச்சியத்தை அமைப்பத்கு அமெரிக்கா சந்தர்ப்பம் வழங்கியமை அதிருப்தி அளிப்பதாக இலங்கை அரசாங்கம் அறிவித்துள்ளது.

அண்மையில் அமெரிக்காவின் நியூயோர்க் நகரிலிருந்து இந்த தமிழீழ இராச்சிய அமைச்சரவையின் பெயர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளதாக திவயின பத்திரிகை சுட்டிக்காட்டியுள்ளது.

இது தொடர்பில் இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் பெட்ரிக்கா புட்டினஸிடம் விளக்கம் கோர உள்ளதாக அரசாங்கத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

அமெரிக்காவின் புலிப் பிரதிநிதி உருத்ரகுமாரன் குறித்த ஈழ இராச்சியத்தின் பிரதமராகவும், மூன்று பிரதி பிரதமர்களின் பெயர்களும் வெளியிடப்பட்டுள்ளன.

இலங்கையில் ஈழ இராச்சியமொன்றை உருவாக்குதல் மற்றும் அசாங்கத்தினால் தடுத்து வைக்கப்பட்டுள்ள விடுதலைப் புலி உறுப்பினர்களை விடுதலை செய்தல் ஆகியவற்றை நோக்கமாகக் கொண்டு தமிழீழ இராச்சியம் அமைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த தமிழீழ இராச்சிய அறிவிப்பு தொடர்பில் அமெரிக்க இராஜாங்கத் திணைக்களம் இதுவரையில் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.

தமிழீழ இராச்சியத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் அனைவருக்கும் இலங்கைக்குள் பிரவேசிக்க முடியாத வகையில் தடை விதிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, இந்த தமிழீழ இராச்சிய அமைச்சரவையில் நோர்வேயின் நெடியவன் குழுவைச் சேர்ந்த எவருக்கும் சந்தர்ப்பம் வழங்கப்படவில்லை என திவயின பத்திரிகை சுட்டிக்காட்டியுள்ளது.

0 Responses to நாடு கடந்த தமிழீழ இராச்சியத்தை அமைப்பதற்கு அமெரிக்கா இடமளித்தமைக்கு இலங்கை அதிருப்தி

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com