Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

நெதர்லாந்தில் அல்மேரா என்னும் நகரதில் 27-11-2010 12:30 மணியளவில் தேசிய நினைவெழுச்சிநாள் நிகழ்வுகள் நடைபெற்றன.

பொதுச்சுடரேற்றத்துடன் ஆரம்பித்த இந்நிகழ்வுகளில் ஆயிரக்கணக்கான மக்கள் கலந்துகொண்டு உயிரையும் உடலையும் எமக்குக் காப்பரணாக்கிய உத்தமர்களிற்கு, வரலாற்றின் நாயகர்களுக்கு விளக்கேற்றித் தமது அஞ்சலியை செலுத்தினர்.

அதனைத் தொடர்ந்து அகவணக்கம் செலுத்தப்பட்டு, மலர்வணக்க நிகழ்வும் இடம்பெற்றது.

எழுச்சி நடனங்கள், நாடகங்கள், சிறப்புரை ஆகியவற்றோடு "நம்புங்கள் தமிழீழம் நாளை பிறக்கும்..." என்ற பாடல் ஒலிக்கவிடப்பட்டு தேசிய நினைவெழுச்சிநாள் நிகழ்வுகள் இனிதே நிறைவடைந்தன.

அதேபோன்று, அயர்லாந்து தலைநகர் டப்ளின் ( Dublin) இல் நேற்று பிற்பகல் 27.11.2010, சனிக்கிழமை மாலை 3.00 மணியளவில் எமது தாயக விடிவிற்காக தமது இன்னுயிர்களை தியாகம் செய்த அனைத்துப் போராளிகளையும், மற்றும் இலங்கை அரசினால் இதுவரை காலமும் திட்டமிட்டு படுகொலை செய்யப்பட்ட பல்லாயிரக்கணக்கான அப்பாவிப் பொது மக்களையும் நினைவுகூறும் தேசிய நினைவெழுச்சி நாள் இடம்பெற்றது.

பொதுச்சுடர், ஈகைச்சுடர் ஏற்றி ஆரம்பித்த மாவீரர்தின நிகழ்வானது, சொற்பொழிவுகள், கலைநிகழ்வுகளோடு, ஓவியக்கண்காட்சியும் நடைபெற்று நிறைவுபெற்றது.

நெதர்லாந்து படங்கள்




0 Responses to நெதர்லாந்து, அயர்லாந்து ஆகிய நாடுகளில் நடைபெற்ற மாவீரர்தின நிகழ்வுகள் (படங்கள் இணைப்பு)

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com