எந்த இலட்சியத்திற்காக தமிழ் மக்கள் லட்சக்கணக்கான பேர் தங்கள் இன்னுயிரை ஈந்தார்களோ, அந்த இலட்சியத்தை தவிடு பொடியாக்கும் வகையில் ராஜபக்ச இப்பொழுது தன் சுயரூபத்தை காட்டியிருக்கிறார் என, புதிய தமிழகம் கட்சியின் நிறுவனர் கிருஷ்ணசாமி கூறியுள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
சுயநிர்ணய உரிமைக்காகவும், பாதுகாப்புக்காகவும் ஈழத்தமிழ் மக்கள் தொடர்ந்து போராடி வருகிறார்கள். தனி ஈழத்திற்கான தமிழ் மக்களின் போராட்டத்தை ஈவு இரக்கமற்ற வகையில் ராஜபக்ச இராணுவ நடவடிக்கையின் மூலமாக ஒடுக்கி வருகிறார்.
2008 - 09 ம் ஆண்டுகளில் தமிழ் மக்களின் மீதான தாக்குதலின் போது, போர் முடிவுற்ற பின்னர் தமிழ் மக்களின் பிரச்சனைகளுக்கு அரசியல் ரீதியான தீர்வு காணப்படும் என்று ராஜபக்ச அறிவித்திருந்தார். தமிழ் மக்களை காப்பாற்ற வேண்டி இந்திய அரசும், தமிழக முதலமைச்சரும் இதே கருத்திற்கு ஆதரவு தெரிவித்தனர்.
போர் முடிந்து இரண்டு வருடங்கள் நிறைவு பெறும் வேளையில் அரசியல் தீர்வுக்கான எந்த முயற்சியையும் ராஜபக்ச எடுக்கவில்லை. மாறாக எந்த தமிழ் இலட்சியத்திற்காக தமிழ் மக்கள் லட்சக்கணக்கான பேர் தங்கள் இன்னுயிரை ஈந்தார்களோ, அந்த இலட்சியத்தை தவிடு பொடியாக்கும் வகையில் ராஜபக்ச இப்பொழுது தன் சுயரூபத்தை காட்டியிருக்கிறார்.
சிங்கள மொழிக்கும், சிங்களவர்களுக்கும் நிகரான அந்தஸ்து என்ற நிலையிலிருந்து முற்றிலுமாக மாறி இப்பொழுது சிங்கள மொழியை மட்டுமே முன் நிலைப்படுத்தி தமிழ் மொழியினுடைய எல்லா விதமான அடையாளங்களையும் அழிக்கும் வகையில் இப்பொழுது சிங்கள மொழி மட்டுமே தேசிய கீத மொழியாக அறிவித்திருக்கிறார். இது வன்மையாக கண்டிக்கத்தக்கது.
உடனடியாக ஈழத்தில் தமிழ் மொழிக்கான அங்கீகாரத்தையும், இன்னும் சொல்லப் போனால் இரு மொழிக்குண்டான சம அந்தஸ்தை கொடுக்கத் தவறும் பட்சத்தில் மீண்டும் உலகெங்கும் வாழும் தமிழ் மக்களின் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தும் என்று எச்சரிக்கிறேன்.
அதே நேரம், சிங்கள இனவெறிக் கும்பலின் கைகளில் சிக்கியுள்ள இலங்கைத் தீவில், தமிழீழம் மலர்வது ஒன்றே, தமிழ் மக்களின் உரிமைகள் காப்பாற்றப்பட ஒரே தீர்வு என்பதை ராஜபக்சவின் நடவடிக்கை நிரூபித்துள்ளது என்பதை இங்குள்ள அரசியல்வாதிகள் அனைவரும் அறிவிக்க வேண்டும் என்று கிருஷ்ணசாமி கூறியுள்ளார்.

0 Responses to ஈழத் தமிழருக்கு எதிராக மகிந்த தன் சுயரூபத்தை காட்டியிருக்கிறார்: கிருஷ்ணசாமி