Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

இறுதிக்கட்ட யுத்தத்தின் போது விடுதலைப்புலிகளுடன் கடைசி வரை தங்கியிருந்த மருத்துவர்கள் இருவரும் இன்று நீதிமன்றத்தால் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

கிளிநொச்சியின் முன்னாள் சுகாதாரப் பணிப்பாளர் டீ. சத்தியமூர்த்தி மற்றும் கந்தசாமி துரை கேதீஸ் ஆகிய மருத்துவர்களே அவ்வாறு விடுதலை செய்யப்பட்டவர்களாவர்.

விடுதலைப்புலிகளின் செயற்பாடுகளுக்கு ஒத்துழைப்பு நல்கிய குற்றச்சாட்டின் பேரில் கடந்த 2009ம் வருடம் மே மாதம் 16ம் திகதி அவர்கள் இரகசியப் புலனாய்வுத்துறையால் கைது செய்யப்பட்டிருந்தனர்.

அரசாங்கத்தால் பொதுமக்களுக்கு வழங்கப்பட்ட மருந்து வகைகளை விடுதலைப்புலிகளுக்கு வழங்கியமை, மோதல்கள் இடம்பெற்ற காலப்பகுதியில் இராணுவத்தினரை அபகீர்த்திக்குள்ளாக்கும் கருத்துக்களை சர்வதேச ஊடகங்களுக்கு வழங்கியமை போன்ற குற்றச்சாட்டுகளும் அவர்கள் மீது சுமத்தப்பட்டிருந்தன.

அதன் பின் அதே வருடம் ஆகஸ்ட் 24ம் திகதி அவர்கள் பிணையில் விடுதலை செய்யப்பட்டிருந்தாலும் அவர்களுக்கெதிரான வழக்கு தொடர்ந்து விசாரிக்கப்பட்டு வந்தது.

ஆயினும் அவர்களுக்கெதிரான வழக்கை தொடர்ந்து முன்னெடுக்க போதுமான சாட்சியங்கள் இல்லை என்று சட்ட மா அதிபர் திணைக்களம் இன்று நீதிமன்றத்துக்கு அறிவித்ததையடுத்து மருத்துவர்கள் இருவரும் குற்றச்சாட்டிலிருந்து விடுவிக்கப்பட்டு வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது.

0 Responses to விடுதலைப்புலிகளுடன் இருந்த மருத்துவர்கள் இன்று விடுதலை (காணொளி இணைப்பு)

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com