மகிந்தவிற்கு எதிராக பிரித்தானியாவில் நடைபெறும் போராட்டத்திற்கு வலுச்சேர்க்கும் வகையிலும், சர்வதேச நீதிக்கூண்டில் போர் குற்றங்களுக்காக நிறுத்தப்படவேண்டிய ராஐபக்சவை எந்தவொரு நாட்டிலும் அனுமதிக்கக்கூடாது என்பதை வலியுறுத்தியும் ஜேர்மனி பெர்லினில் அமைந்திருக்கும் பிரித்தானிய தூதரகதுக்கு ஜேர்மன் ஈழத் தமிழர் அவையின் செயற்குழு...
மனு கொடுப்பதுக்கான ஒழுங்குகள் முன்எடுக்கப்படுகின்றது.
யேர்மன் ஈழத் தமிழர் அவையின் அவசர வேண்டுகோள்!!!
எம் உயிரினிலும் மேலான புலம் பெயர் தமிழ் ஈழ மக்களே,
எம் உரிமைக்கான விடுதலை போராட்டத்தில் ஆயிரத்துக்கும் மேலான எம் உடன் பிறவா உறவுகளை ஈன இரக்கமின்றி தடை செய்யப்பட்ட குண்டுகளில் இருந்து எரி குண்டுகள், மூலமாக கொன்றழித்து இன்றும் போர் முடிந்து ஒரு வருடத்துக்கும் மேலாக எந்த ஒரு அரசியல் தீர்வையும் தமிழ் மக்களுக்கு முன்வைக்காமல் தொடர்ந்தும் தமிழ் ஈழத்தில் ரகசியமாக இன அழிப்பை கையாளும் போர் குற்றவாளி ராஐபக்சவின் பிரித்தானிய வருகையை எதிர்த்து பிரித்தானியா வாழ் எமது உறவுகள், தொடர் போராட்டங்களை அங்கு நடாத்தி வருகின்றனர்.
இதன் தொடர்ச்சியாக இனப்படுகொலையின் பிரதம குற்றவாளியான மகிந்தா ராஜபக்சாவுக்கு எதிராக இன்று (02.12.2010 ) மிகப்பெரும் கண்டன ஆர்ப்பாட்டம் இடம்பெறவுள்ளதாக பிரித்தானியா தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த போராட்டத்திற்கு ஆதரவுகளை வழங்கும் பொருட்டு பிரித்தானியாவில் வாழும் அனைத்து தமிழ் ஈழ மக்களும் அணிதிரளுமாறு வேண்டிக்கொள்கிறோம்.
ஸ்ரீலங்கா இனவெறி அரசு புரிந்த போர்க் குற்றத்தை அடிப்படையாக கொண்டு பிரித்தானிய தமிழர் பேரவை மேற்கொள்ளும் வேலைத்திட்டங்கள் முன்மாதிரியானவை ஆகும்.
திட்டமிட்ட ஒருங்கிணைப்பாலும், தமிழ் மக்களின் ஒற்றுமையாலும், விரைந்த முயற்சியாலும் மகிந்த ராஜபக்ச, ஒக்ஸ்போட் சங்கத்தில் இன்று (வியாழக்கிழமை) ஆற்ற இருந்த உரை இரத்து செய்யப்பட்டுள்ளதாக, ஒக்ஸ்போட் சங்கமும், மகிந்த ராஜபக்சவின் செயலரும் அறிவித்துள்ளனர்.
சர்வதேச ஊடகங்கள் அனைத்தும் இன்றைய கண்டன ஆர்ப்பாட்டத்தை மிகவும் கூர்மையாக கவனிக்கும் வேளையில் அனைத்து ஈழத் தமிழ் மக்களும் இப் போராட்டத்தில் இணைந்து கொள்வது வரலாற்று கடமையாகும் .
மகிந்த ராஜபக்சவிற்கு எதிராக பிரித்தானியாவில் நடைபெறும் போராட்டத்திற்கு வலுச்சேர்க்கும் வகையிலும், சர்வதேச நீதிக்கூண்டில் போர் குற்றங்களுக்காக நிறுத்தப்படவேண்டிய ராஐபக்சவை எந்தவொரு நாட்டிலும் அனுமதிக்கக்கூடாது என்பதை வலியுறுத்தியும் ஜெர்மனி பெர்லினில் அமைந்திருக்கும் பிரித்தானிய தூதரகதுக்கு யேர்மன் ஈழத் தமிழர் அவையின் செயற்குழு மனு கொடுப்பதுக்கான ஒழுங்குகள் முன்எடுக்கப்படுகின்றது.
எம் இனத்தின் வலியை எம் இதயங்களில் சுமந்து கொண்டிருக்கும் நாம், தமிழ் ஈழத்தில் வாய் அடைக்கப்பட்டு இருக்கும் எம் உறவுகளுக்காக , தொடர்ந்து குரல் கொடுப்போம் என உறுதி கொள்வோமாக!.
நன்றி
01.12.2010 பெர்லின்
யேர்மன் ஈழத் தமிழர் அவையின் உருவாக்கக் செயற்குழு
(www.tamilelectiongermany.org)
0 Responses to போர்க்குற்றவாளி மஹிந்தாவை எந்தவொரு நாட்டிலும் அனுமதிக்கக்கூடாது: ஜோ்மன் ஈழத் தமிழர் அவை மனு