ராஜபக்சே போர்க்குற்றவாளி என்று கொழும்பிலுள்ள அமெரிக்க தூதர் அமெரிக்காவுக்கு ஜனவரியில் அனுப்பிய ரகசிய அறிக்கை வெளியானது. தற்போது உலகத்தையே பரபரப்பாக்கிக் கொண்டிருக்கும் விக்கி லீக்ஸ், இந்த அறிக்கையை அம்பலமாக்கியுள்ளது.
அந்த அறிக்கையில் ராஜபக்சே போர்க்குற்றவாளி என்றும் அவரது சகோரர்களும், பொன்சேகாவும் போர்க்குற்றத்திற்கு பொறுப்பு ஆவார்கள் என்றும் குறிப்பிடப்பிட்டுள்ளார் அமெரிக்க தூதர்.
ராஜபக்சேவும், அவரது சகோதரர்கள் இருவரும் போர் குற்றவாளிகள்’: அமெரிக்கா
இலங்கையில் இறுதிக் கட்ட போரின்போது ஆயிரக்கணக்கான தமிழர்களை கொன்று குவித்த அதிபர் ராஜபக்சேவும், அவரது சகோதரர்கள் இருவரும் போர்க் குற்றவாளிகள் தான் என்று கொழும்பிலுள்ள அமெரிக்கத் தூதர் அமெரிக்க வெளியுறவுத்துறைக்கு ஜனவரியில் அனுப்பிய ரகசிய அறிக்கையை விக்கிலீக்ஸ் வெளியிட்டுள்ளது.
கொழும்பிலுள்ள அமெரிக்கத் தூதர் பாட்ரிஷியா வாஷிங்டனில் உள்ள அமெரிக்க வெளியுறவுத்துறை அலுவலகத்துக்கு ஜனவரி மாதம் அனுப்பிய ரகசிய கேபிள் தகவலில் கூறியிருப்பதாவது:
ஒரு அரசு தனது அதிகாரிகளும், படைகளும் தங்கள் பதவிக் காலத்தில் செய்த போர்க் குற்றங்களை தானாக விசாரித்ததாக நாம் கேள்விப்பட்டதே இல்லை.
ஆனால், இலங்கைப் பிரச்சனையில் உள்ள சிக்கல் என்னவென்றால் குற்றங்களை செய்தவர்கள் நாட்டின் உயர் அதிகாரிகளாகவும், ராணுவத் தளபதிகளாகவும் இருக்கிறார்கள். இதில் ராஜபக்சே மற்றும் சகோதரர்களுக்கும், எதிர்கட்சி வேட்பாளர் பொன்சேகாவுக்கும் பங்குள்ளது.
ராஜபக்சே அரசை எதிர்ப்பவர்கள் திடீர் என்று மாயமாகிவிடுகின்றனர் அல்லது கொல்லப்படுகின்றனர்.
உலகளவில் தமிழர்கள் இந்த பிரச்சனைக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கின்றனர். ஆனால் இலங்கையில் இருக்கும் தமிழர்களோ அரசை கடுமையாக எதிர்ப்பதற்கு இது நேரமில்லை என்றும் கருதுகின்றனர் என்று கூறியுள்ளார்.
இந்த தககவலை விக்கிலீக்ஸ் வெளியிட்டுள்ளது.
அதிபர் ராஜபக்சேவின் தம்பி கோத்தபயா ராஜபக்சே தான் பாதுகாப்புத் துறைச் செயலாளராக இருக்கிறார். பொன்சேகா விடுதலைப் புலிகளுக்கு எதிரான போரில் ராணுவத்திற்கு தலைமை வகித்தார். அவர் அதிபர் தேர்தலில் தோற்றபிறகு கைது செய்யப்பட்டார்.
அமெரிக்க ராணுவ ரகசியங்களை விக்கிலீக்ஸ் இணையதளம் வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியது. அதன் நிறுவனர் ஆஸ்திரேலியாவை சேர்ந்த ஜுலியன் அசாங்கே ஆவார்.
இந்த பரபரப்பு அடங்கி வரும் நிலையில் உலகம் முழுவதும் உள்ள பல்வேறு நாடுகளை பற்றிய ரகசியங்களையும், அந்த நாட்டு தலைவர்களை பற்றிய ரகசியங்களையும் அமெரிக்க தூதரகங்கள் திரட்டி அமெரிக்காவுக்கு அனுப்பி வைத்தன. இந்த ரகசியங்களையும் விக்கிலீக்ஸ் வெளியிட்டு உலகத்தையே அதிர்ச்சியில் ஆழ்த்தி வருகிறது.
இதனால் கோபம் அடைந்த அமெரிக்க அரசாங்கம் இந்த இணையதள நிறுவனர் மீது கிரிமினல் சட்டத்தின்படியும், உளவு தடுப்பு சட்டத்தின் கீழும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தீர்மானித்துள்ளது. இந்த நிலையில் தலைமறைவாக இருக்கும் அவரை கைது செய்வதற்கு சர்வதேச போலீஸ் உதவியை சுவீடன் நாடி உள்ளது.
அவரை கைது செய்வதற்காக சர்வதேச போலீசார் வாரண்டு பிறப்பித்தனர்.சர்வதேச போலீஸ் உலக நாடுகளை எச்சரித்து உள்ளது. விக்கிலீக்ஸ் இணையதள நிறுவனர் அசாங்கேக்கு தென் அமெரிக்காவில் உள்ள ஈகுவேடார் நாடு அழைப்பு விடுத்து உள்ளது.
அவர் தென் அமெரிக்க நாடுகள் பற்றிய ரகசியங்களை எங்களுக்கு தெரிவிக்க வேண்டும். எங்கள் நாட்டின் கம்ப்யூட்டர் பொறியாளர்களுக்கு பயிற்சி அளிக்க வேண்டும் என்று அந்த நாட்டு அரசாங்கம் கேட்டுக்கொண்டுள்ளது. அவர் எங்கள் நாட்டில் இருந்தபடி ஆராய்ச்சிகளை மேற்கொள்ளலாம் என்றும் அழைப்பு விடுத்துள்ளது. இந்நிலையில் ராஜபக்சே போர்க்குற்றவாளி என்று கொழும்பில் உள்ள அமெரிக்க தூதர் அனுப்பிய ரகசிய அறிக்கையை வெளியிட்டுள்ளது விக்கிலீக்ஸ்.

0 Responses to மகிந்த ராஜபக்சே போர்க்குற்றவாளி விக்கி லீக்ஸ்