பிரித்தானியாவுக்கு வருகை தந்திருக்கும் இலங்கை ஜனாதிபதியும், போர்க்குற்றவாளியுமான மகிந்தவை கண்டித்து கனடா மொன்றியலில் கவனயீர்ப்பு நடைபெற்றது.
பிரித்தானியாவுக்கு வருகை தந்திருக்கும் மகிந்தவை கண்டித்து பிரித்தானிய உறவுகள் மேற்கொள்ளும் கண்டனப் போராட்டங்களிற்கு வலுச்சேர்க்கும் விதமாகவும். இனப்படுகொலையாளி, போர்க்குற்றவாளி மகிந்தவை எந்தவொரு நாடும் ஏற்றுக்கொள்ளக்கூடாது என வேண்டியும் கனடியத் தமிழர் தேசிய அவையால் கனடாவின் மொன்றியல் ரொரன்றோ நகரங்களில் அமைந்துள்ள பிரித்தானிய துணைத்தூதரகத்திற்கு முன்பாக கவனயீர்ப்புப் போராட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.
மொன்றியல் மாநகரில் நகரின் மத்தியில் அமைந்துள்ள பிரித்தானிய துணைத்தூதரகத்திற்கு முன்பாக 02.11.2010 வியாழக்கிழமை பகல் 11:00 மணி தொடக்கம் பிற்பகல் 2:00 மணிவரை கவனயீர்ப்பு நடைபெற்றது.
குறுகிய கால இடைவெளியில் அழைப்பு விடுக்கப்பட்டிருந்தபோதும் வார நாளையும் கடும் குளிரையும் பொருட்படுத்தாது கணிசமான மக்கள் கவனயீர்ப்பில் கலந்துகொண்டதோடு. பிரித்தானிய அரசாங்கத்திற்கு மனு ஒன்றையும் கையளித்தனர். மனுவைப் பெற்றுக்கொண்ட தூதரக அதிகாரிகள் அதனை தமது அரசாங்கத்திற்கு அனுப்பி வைப்பதாக உறுதியளித்ததுடன் அமைதியான முறையில் ஆர்ப்பாட்த்தை நடாத்தி முடித்ததற்கு தமது வரவேற்பையும் தெரிவித்தனர்.

0 Responses to போர்க்குற்றவாளி மகிந்தவுக்கு எதிராக மொன்றியலில் நடந்த கவனயீர்ப்பு (படங்கள் இணைப்பு)