இந்த மாத முற்பகுதியில் பிரித்தானியாவிலிருந்து இலங்கை திரும்பியிருந்த தானும் தன்னை வரவேற்பதற்காக வந்திருந்த கட்சி உறுப்பினர்களும் விமான நிலையத்தில் வைத்து தாக்கப்பட்டதாக முறைப்பாட்டில் அவர் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,
இலங்கைப் பிரஜை என்ற வகையில் நாட்டிற்குள் நுழைவதற்கான உரிமை இத் தாக்குதலின் மூலம் மீறப்பட்டுள்ளது.
இந்த தாக்குதல் சம்பவம் தொடர்பில் நான் தொடர்ந்தும் கவனம் செலுத்தவுள்ளேன். இந்த தாக்குதல் சம்பவம் தொடர்பில் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் முறைப்பாடு செய்துள்ளபோதிலும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
விமான நிலைய பொலிஸாரிடம் பிரதிப் பொலிஸ் மா அதிபரிடம் நான் முறையிட்டேன். அவர்கள் எனக்கும் எனது கட்சி உறுப்பினர்களுக்கும் பாதுகாப்பு வழங்குவதற்கு இணக்கம் தெரிவித்திருந்தபோதிலும் இதுவரை எதுவும் செய்யவில்லை.
விமான நிலையத்திலிருந்து நான் வெளியேறிய பின்னர் அங்கிருந்த எனது ஆதரவாளர்கள் தாக்கப்பட்டனர். வாகனமொன்றும் எரியூட்டப்பட்டது.
கறுப்பு நிற காற்சட்டையும் வெள்ளை நிற சேர்ட்டும் அணிந்திருந்ததால் விமான நிலையப் பணியாளர்களையும் அந்தக் கும்பல் கொண்டிருந்ததெனத் தோன்றுகிறது.
குறித்த இடத்தில் நடந்த சம்பவங்களை பதிவு செய்த ஊடகவியலாளர்களும் சட்டத்தரணிகளும் தாக்கப்பட்டனர்.
தாக்குதல் சம்பவம் இடம்பெற்று மறு நாள் நான் பொலிஸில் முறைப்பாடு செய்தேன் என்று கூறினார்.



0 Responses to விமானநிலைய தாக்குதல் தொடர்பில் மனித உரிமை ஆணைக்குழுவில் விக்கிரமபாகு முறையீடு