Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டு வேலூர் சிறையில் இருந்த நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் இன்று மதியம் 1.30க்கு சிறையில் இருந்து விடுதலை பெற்றார்.

அவரை வரவேற்பதற்காக தமிழகம் முழுவதிலும் இருந்து ஏராளமான நாம் தமிழர் கட்சியினர் காலையில் இருந்தே சிறை வாயிலில் காத்திருந்தனர். இயக்குநர் பாலா 12.30 மணிக்கு வந்து காத்திருந்தார்.

சிறையில் இருந்து சீமான் வெளியே வந்ததும். அவரை பாலா வரவேற்க ஓடினார். பாலாவின் வருகையை சற்றும் எதிர்பார்க்காத சீமான், ‘நீ ஏண்டா வந்தே..?’ என்று பாசமாக கேட்டார்.

இல்லண்ணே.....’என்று பாலா சிரித்துக்கொண்டிருந்தார். அப்போது வேக வேகமாக வந்து பாலாவை கட்டிப்பிடித்து அவருக்கு பாசமுடன் முத்தம் கொடுத்தார் சீமான்.

செய்தியாளர்கள் சந்திப்பு முடிந்து, சீமான் சிறைக்கு வெளியே அமைக்கப்பட்டிருந்த மேடையேறி நாம் தமிழர் கட்சியினரியே எழுச்சி உரை ஆற்றும் வரை அவர் அருகிலே இருந்தார் பாலா.

பின்னர் இருவரும் தனித் தனி காரில் சென்னை திரும்பினர்.


0 Responses to பாலாவுக்கு செந்தமிழன் சீமான் கொடுத்த முத்தம் (படங்கள் இணைப்பு)

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com