Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

தன் மீதான தேசிய பாதுகாப்பு சட்டத்தை சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்ததையடுத்து, வேலூர் சிறையில் இருந்து சீமான் விடுதலை ஆனார். சிறையில் இருந்து விடுதலையான சீமானுக்கு, நாம் தமிழர் இயக்கத்தினர் சிறப்பான வரவேற்பு அளித்தனர்.

சிறையில் இருந்து வெளியே வந்த சீமான் செய்தியாளர்களிடம் பேசுகையில் அடைத்தனர். இரண்டு முறை தேசிய பாதுகாப்பு சட்டம் என் மீது பாய்ந்துள்ளது. இரண்டு முறையும், தமிழக அரசு தவறாக என் மீது சட்டத்தை போட்டுள்ளது என நீதிமன்றம் என்னை விடுதலை செய்துள்ளது. இந்த முறை 5 மாதங்கள் சிறையில் இருந்துள்ளேன். இதனால் எனது தொழில் முடங்கியது. இதற்கெல்லாம் தமிழக அரசுதான் காரணம். அதனால் தமிழக அரசிடம் நஷ்ட ஈடு கேட்க உள்ளோம் என்றார்.

பின்னர் செய்தியாளர்களின் கேள்விகளுக்கு சீமான் பதில் அளித்தார்.

கேள்வி: தமிழக அரசு சட்டத்துக்கு புறம்பாக கைது செய்ததாக கூறுகிறீர்களே, அதுகுறித்து நீங்கள் என்ன செய்யப் போகிறீர்கள்?

பதில்: தமிழக அரசு மீது வழக்கு போட முடிவு செய்துள்ளோம்.

கேள்வி: வரும் தேர்தலில் உங்கள் நிலைப்பாடு என்ன?

பதில்: நாங்கள் தேர்தலில் போட்டியிட போகிறோம்.

கேள்வி: நீங்கள் போட்டியிடுவீர்களா?

பதில்: நான் போட்டியிடவில்லை.

கேள்வி: ஆளுங்கட்சியை எதிர்த்து பிரச்சாரம் செய்வீர்களா?

பதில்: நாம் தமிழர் இயக்கத்துக்கு காங்கிரஸ் கட்சி கொள்கை ரீதியான எதிரி. அவர்களோடு கூட்டணி யார் வைத்தாலும் அவர்களை எதிர்த்து பிரச்சாரம் செய்வோம்.

கேள்வி: முதல்வர் கருணாநிதியை எதிர்த்து நீங்கள் பொது வேட்பாளராக நிறுத்தப்பட போவதாக நாம் தமிழர் இயக்கத்தினரால் சொல்லப்படுவது உண்மையா?

பதில்: நடக்கலாம்.

இவ்வாறு சீமான் பதில் அளித்தார்.

0 Responses to கருணாநிதியை எதிர்த்து போட்டியிடுவீர்களா? சீமான் பரபரப்பு பேட்டி

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com