Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

அமெரிக்காவின் கன்சாஸ் நகரில் ஈழத்தைச் சேர்ந்த சுஜேந்திரா அமரசிங்கம் எனப்படும் பல்கலைக்கழக மாணவன் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார்.

இன்னர் சிற்றி ஓயில் என்கின்ற பெற்றோல் நிலையத்தில் இரவு வேலைசெய்துகொண்டிருந்த இம்மாணவர், அதிகாலை 4.40 மணியளவில் அங்கு வந்த துப்பாக்கிதாரியால் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார்.

25 வயதுடைய இவர் பெற்றோல் நிலையத்திற்கு வெளியில் இருந்த குப்பைகளை காலையில் அகற்றிக்கொண்டுநின்றுள்ளார். அப்போது துப்பாக்கி கொண்டு ஒருவர் வந்தபோது அதனை கண்டு இம்மாணவர், கடைக்குள் ஓடிச்சென்றுள்ளார்.

அப்போது துப்பாக்கிதாரியால் சுடப்பட்ட அம்மாணவர், கடைவாசலில் சுடப்பட்டு கீழேவிழுந்துள்ளார். அதனை தொடர்ந்து கடைக்குள் உள்நுழைந்த துப்பாக்கிதாரி கடையிலிருந்த பொருட்களை திருடிக்கொண்டு வெளியேறியுள்ளார்.

சில நிமிடங்களில் கடைக்கு வந்த இன்னொரு வாடிக்கையாளர், காயமடைந்து உயிருக்கு போராடிக்கொண்டிருந்த மாணவனை பொருட்படுத்தாமல் உள்நுழைந்து கடையிலிருந்த பணத்தை திருடிக்கொண்டு வெளியேறியுள்ளார்.

இச்சம்பவம் காணொலியில் பதிவுசெய்யப்பட்டுள்ளது. ஒருவர் உயிருக்கு போராடிக்கொண்டிருந்த நேரத்தில் திருட்டில் ஈடுபட்ட இவ்வாடிக்கையாளரின் செயற்பாடு குறித்து அனைவரும் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

இலங்கைத்தீவில் தொடர்ந்துகொண்டிருந்த வன்முறை காரணமாகவே சுஜேந்திரா அமெரிக்கா வந்து கல்வி கற்றுவந்ததாக அவரது நண்பர் ஜோனாதன் வில்லியமஸ் தெரிவிக்கின்றார்.

சுஜெந்திராவின் பெற்றோர்கள் சுஜேந்திரா இங்கு பாதுகாப்பாக கல்வி கற்பார் என எதிர்பார்த்திருந்தார்க்ள். ஆனால் இவ்வாறான நிலை ஏற்பட்டுள்ளது என்கின்றார் அவர்.







0 Responses to அமெரிக்காவில் ஈழத்தமிழ் மாணவன் சுட்டுக்கொலை! (காணொளி, படங்கள் இணைப்பு)

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com