Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

இந்தியாவின் கேரளா மாநிலத்தில் தமிழீழ விடுதலைப்புலிகள் மீளிணைந்து வருவதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இது தொடபிலான ஆவணப்படம் ஒன்று, கேரளாவின் திருவாநந்தபுரம் மண்டபத்தில் ஒளிபரப்பு செய்யப்பட்டதாக .பி.எம் லைவ் இணையத்தளம் செய்தி வெளியிட்டுள்ளது.

இலங்கையில் கடந்த வருடம் இடம்பெற்ற தமிழின படுகொலை தொடர்பில் தயாரிக்கப்பட்ட 'முல்லைத்தீவு சாகா' என்ற பெயரிலான திரைப்படமே மண்டபத்தில் ஒளிபரப்பு செய்யப்பட்டுள்ளது.

இந்தநிலையில் விடுதலைப் புலிகள் அங்கு மீளிணையலாம் என்ற சந்தேகம் ஏற்பட்டதைத் தொடர்ந்து காவற்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மிகவும் இரகசியமான முறையில் நடத்தப்பட்ட விடுதலைப்புலிகளின் சிரேஷ்ட தலைவர்களின் கூட்டத்தை தொடர்ந்து இந்த திரைப்படம் காட்சிப்படுத்தப்பட்டதாக மலையாள பத்திரிகை ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

எனினும் அதன் பின்னர் காவற்துறையினர் இது தொடர்பில் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

இந்த சம்பவத்தின் பின்னர் கேரளாவில் இடம்பெற்ற காவற்துறையினரின் ஊடக சந்திப்புகளின் போதும், ஊடகவியலாளர்கள் இது தொடர்பில் பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளனர்.

எனினும் மலையாள சிரேஷ்ட ஊடகவியாளர் எம்.ஜீ.ராதாகிருஷ்ணன் இந்த ஆவணப்படம் திரையிடப்பட்டமை தொடர்பில் ஆச்சரியம் கொள்ளத் தேவை இல்லை என குறிப்பிட்டுள்ளார்.

எவ்வாறாயினும் இவ்வாறான திரைப்படம் ஒன்று உண்மையில் திரையிடப்பட்டதா? எனவும், அவ்வாறு திரையிடப்பட்டிருந்தால் அதில் கலந்துக் கொண்டவர்கள் தொடர்பிலான தகவல்கள் குறித்தும் விசாரணை நடத்தி வருவதாக காவற்துறை ஆணையாளர் அஜித்குமார் தெரிவித்துள்ளார்.

எனினும் நாட்டின் இறைமையை பாதிக்காத எந்த ஒரு திரைப்படத்தையும் திரையிட தடை ஏற்படுத்தப்போவதில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

0 Responses to கேரளா மாநிலத்தில் விடுதலைப்புலிகள் மீளிணைகின்றனர்: (காணொளி இணைப்பு)

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com