Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

ஏய் ஆய்போவான் ம(கிந்தா)டையா

பதிந்தவர்: ஈழப்பிரியா 03 December 2010

ஏய் ஆய்போவான் ம(கிந்தா)டையா
இந்திங் தெரியுதுதானே தெமிழ கட்டியோட பலம்
நாங்கள் புலம் பெயர்ந்த தமிழர்கள்தான்- ஆனால்
உன் போன்று புலன் இல்லாதவர்கள் அல்ல
பிணம் திண்னி கழுகே- நீ
விளையாட தமிழர்கள் என்ன விளையாட்டு திடலா
நீ கம்பி எண்ணும் நாட்கள் தொலைவில் இல்லை
நீ தொலை தூரமாய் போனாலும்
உன் சாவுக்கு காரணமாய் இருப்பது எம் பரம்பரைதான்
நீ பார்த்த பொழுதே முப் படையுடன்
ஆண்ட பரம்பரை எம் பரம்பரை – மீண்டும்
எம் மண்ணை நாம் ஆளூம் போது – ஆடப் போவது
உன் பரம்பரை…

எம் வீரப் புதல்வர்களின் ஆயுதங்கள் மெளனித்து
நிராயுத பாணியாக நின்ற வேளை
கண்,வாய்,கை,கால்கள் கட்டி எம்
வீரப் பெண்களின் கற்பை சூறையாடி
அவர்கள் ஆடைகளை களைந்து அலங்கோலப்படுத்தி
நெஞ்சுரம் காட்டி சென்ற எம் வீரப் புதல்வர்களின்
உயிர்களை பின் புறத்தால் குடித்த
புறம் போக்கு நிலத்தில் பிறந்த பிணம் தின்னி நாய்களே
நாம் என்ன மெளனிப்போம் என்று நினைத்தீர்களோ..!

நீ என் இனத்துடன் உன் இனத்தை வைத்தா போரிட்டாய்..??
ஆம்! என்று சொல்ல உனக்கு 30 வருடங்கள் எடுக்கும்
இல்லையென்று ஒரே சொல்லில் சொல்லி விட்டு
உன்னையும் உன் இனத்தையும் காக்க
உதவி தந்த வல்லரசுகளையும் பட்டியலிட்டு கூறிவிட்டு போ..
போ போ போ என்று கூறுகின்றேன்
எங்கே என்று புரிகின்றதா????
சற்றுத் திரும்பிப் பார்
எம் இனம் உனக்கு பிரியாவிடை கொடுத்து
சிறைக் கூடம் அழைத்து செல்ல காத்திருக்கின்றது.

அன்று உன் இனத்தால் எம் இன அப்பாவி மக்கள்
இன்னல் படும் வேளையில் தூதராலயம் செல்வார்கள்
ஆனால் இன்று..! எம் இனத்தை கொன்று ரசித்த- நீ
உன் நாட்டு தூதராலயத்திலே நிற்க்க முடியாமல்
தப்பித்து ஓட்டம் பிடிக்கிறாய்…

ஒக்ஸ்போர்ட் பல்கலைக் கழகத்தில் நீ உரையாற்றுவதற்க்கு
அது என்ன புறக்கோட்டை முன் புற வீதியா..??
உனது சகாக்களுடன் தேர்தல் பிரச்சாரம் செய்யும்
இடம் என்று நினைத்தாயா…???
அங்கு போர் குற்றவாளிகள் இல்லை
உனது உரையை கேட்க்க
இத்திங் பல்கலைக் கழகம் மாத்தயா.

ஆங்கிலேயர் மரணித்த கல்லறைகளை
பூஞ்சோலைகள் ஆக்கி பாது காக்கும் அரக்கன் நீ
எமது மண்ணில் எமக்காக வீழந்த வீர மறவர்கள்
துயில் கொள்ளும் துயில் அறைகளை
கலைத்து விட்ட காடையனே …!
உனக்கு ஆங்கிலேயர் மண்ணிலேயே ஆட்ச்சி கவிழுமோ???

“மமதம ஜனாதிபதியே மமதம ஜனாதிபதியே”
என்று நீ மார்பு தட்டி கூறும் சொல் முடிவுற்று
“மமதம யுத்தய திரஸ்தவாதியே”(நான் தான் போர்க் குற்றவாளி)
என்று விரைவில் உரக்க சொல்லுவாய்.

எஸ்வீஆர்.பாமினி

0 Responses to ஏய் ஆய்போவான் ம(கிந்தா)டையா

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com