Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

சிங்களத்தில் மட்டுமே தேசிய கீதம் இசைக்கப்பட வேண்டுமென்ற அரசாங்கத்தின் தீர்மானத்துக்கு அமைச்சர் விமல் வீரவங்ச பாராட்டுத் தெரிவித்துள்ளார்.

இதன் மூலம் கடந்த காலத்தில் விடப்பட்ட ஒரு தவறு தற்போது சீர்செய்யப்பட்டுள்ளது என்று அவர் கூறுகின்றார்.

உலகில் வேறெந்த நாட்டிலும் தேசிய கீதம் வேறு மொழிகளில் பாடப்படுவதில்லை. ஏன் பல மொழிகளைப் பேசும் இந்தியாவிலும் கூட ஹிந்தியில் மட்டுமே தேசிய கீதம் இசைக்கப்படுகின்றது.

1978ம் ஆண்டின் அரசியலமைப்பு மாற்றத்தின் போது தமிழ் மொழி தேசிய கீதம் அறிமுகப்படுத்தப்பட்டமை ஒரு சிரிப்புக்கிடமான விடயம் மட்டுமே என்றும் அவர் சுட்டிக் காட்டுகின்றார்.

இதற்கிடையே தேசப்பற்றுள்ள தேசிய இயக்கத்தின் தலைவர் கலாநிதி குணதாச அமரசேகரவும் அரசாங்கத்தின் தீர்மானத்தை வரவேற்றிருப்பதுடன், அதனை துணிச்சலான தீர்மானம் என்றும் சிலாகிக்கின்றார்.

தமிழில் தேசிய கீதம் அறிமுகப்படுத்தப்பட்டதன் பின்னணியில் பிரிவினைவாதிகள் இருந்ததாகச் சுட்டிக்காட்டும் கலாநிதி குணதாச அமரசேக்கர, அதனை நீக்குவதற்கு ஜனாதிபதி எடுத்த முடிவு துணிச்சலானது என்று பாராட்டுகின்றார்.

அந்த வகையில் தற்போது ஜனாதிபதியின் தீர்மானத்துக்கு எதிர்ப்புத் தெரிவிக்கின்றவர்கள் பிரிவினைவாதிகளின் கையாட்களே என்றும் அவர் குற்றம் சாட்டுகின்றார்.

0 Responses to சிங்களத்தில் தேசிய கீதம் சரியான முடிவு: விமல் வீரவங்ச பாராட்டு

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com