வன்னி யுத்தம் தொடர்பில் தமிழ் மக்களைச் சீண்டும் வகையில் கருத்துவெளியிட்ட வந்தவர் யாழ் அரச அதிபர் இமெல்டா சுகுமார்.
ஆனால் இவர், தற்போது லண்டனில் மஹிந்த ராஜபக்சவிற்கு எதிராக மக்கள் நடத்திய ஆர்ப்பாட்டம் தொடர்பில் தனது கடுமையான எதிர்ப்பினை வெளியிட்டு தனக்கு வழங்கப்பட்ட பதவிக்காக அரச விசுவாசத்தைக் காட்டியுள்ளதாக அறியமுடிகிறது.
வெளிநாட்டில் உள்ள தமிழர்கள் இங்குள்ள மக்களுக்கு காசு பணம் அனுப்பாவிட்டாலும் பரவாயில்லை, அவர்களைக் கொன்றுவிட வேண்டாம் என அவர் புலம்பெயர் தமிழர்களைத் திட்டித் தீர்த்துள்ளதாக அரச ஆதரவுத் தொலைக்காட்சியான டான் தொலைக்காட்சி வெளியிட்ட செய்தி ஒன்றின் மூலம் அறியமுடிந்தள்ளது.
இன்று காலை மணிச் செய்திகளை வழங்கியபோது குறித்த தொலைக்காட்சி இமெல்டா சுகுமார் புலம்பெயர் தமிழர்களுக்கு அறிவுரை வழங்கியதாக வெளியிட்ட தனது செய்தியில் வெளிநாட்டில் உள்ள புலம்பெயர் தமிழர்கள் உழைப்பதைவிட்டு வீண்வேலைகளில் ஈடுபடுவதாகவும் அவர்கள் ஆர்ப்பாட்டங்கள் பேரணிகள் என அலைவதை விடுத்த இங்குள்ள மக்களுக்கு உதவிகள் வழங்க முன்வரவேண்டும் என்று குறிப்பிட்டதாகவும் இவ்வாறு செய்யாது விட்டாலும் பரவாயில்லை அங்கிருந்து வீண்வேலைகள் பார்த்து இங்குள்ள மக்களைக் கொன்று விடவேண்டாம் என்றும் குறிப்பிட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.
இவர் சிரந்தி ராஜபக்ஷ யாழில் நடாத்தவிருந்த நத்தார் தின விழாவில் கலந்துகொண்டு களியாட்ட நிகழ்ச்சிகளில் சந்தோசமாக இருந்ததையும் அவதானிக்க கூடியதாகா இருந்தது.

0 Responses to புலம்பெயர் தமிழ்மக்கள் வீண்வேலைகளில் ஈடுபடுவதை தவிர்க்க வேண்டும்: இமெல்டா