சிறிலங்காவின் பிரதமர் இந்நிகழ்வில் பங்குபற்றியதால் சிங்களத்தில் மட்டுமே தேசியகீதம் இசைக்கப்படமுடியும் என நிகழ்வு ஏற்பாட்டாளர்கள் அதற்கு காரணமும் கற்பித்துள்ளதாக யாழ் தகவல்கள் தெரிவிக்கின்றன.
சிறிலங்கா அரசின் அதிகாரிகளாலும் இராணுவத்தினராலும் ஏற்பாடு செய்யப்பட்ட இந்நிகழ்வுக்கு பாடசாலை மாணவிகள் வற்புறுத்தலின் அடிப்படையில் சிங்களத்தில் பாடும்படி பணித்ததாகவும் அதனை மாணவிகளின் பெற்றோர் கடுமையாக எதிர்த்ததாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
சிங்கள மொழியில் பரிச்சயம் இன்மையால் சிங்களத்தில் தேசியகீதத்தை இசைப்பதில் தமிழ் மாணவிகள் பெரும் கடினத்தை எதிர்நோக்கியதாகவும், தாங்கள் தமிழில் பாடுவதற்கு தமது விருப்பத்தை தெரிவித்தபோது அது ஏற்றுக்கொள்ளப்படவில்லை எனவும் தெரிவிக்கப்படுகின்றது.
சிங்களத்தில் மட்டுமே தேசியகீதம் இசைக்கப்படவேண்டும் என்ற தீர்மானம் அமைச்சரவையில் கலந்துரையாடப்பட்டபோது அதனை தமிழர் தாயகத்தில் நடைமுறைப்படுத்துவதில் உள்ள பிரச்சனைகள் ஆராயப்பட்டு பிற்போடப்பட்டதாக சிறிலங்கா அமைச்சர்கள் தெரிவித்திருந்தனர்.
தமிழ்மக்களின் கடுமையான எதிர்ப்பை சந்திக்கவேண்டிவரும் என்பதை உணர்ந்துகொண்டே அமைச்சரவையில் அத்தீர்மானத்தை மேற்கொள்ளாதபோதும் தற்போது அதிகாரத்தை மறைமுகமாக பிரயோகித்து சிங்களத்தில் மட்டும் என்ற நடைமுறை கொண்டுவரப்பட்டுள்ளதாகவும் யாழ் மக்கள் தெரிவிக்கின்றார்கள்.
இதுபற்றி டக்ளஸ் தேவானந்தாவிடம் கேட்கப்பட்டபோது, நாட்டின் அரச தலைவரோ அல்லது பிரதமரோ கலந்துகொள்ளும் நிகழ்வுகளில் சிங்களத்தில் தேசியகீதம் இசைக்கப்படுவது வழமை என்று சறுக்கலான பதிலை அளித்துள்ளார்.
ஆனால் இதுபற்றி யாழ்மாவட்ட அரச அதிபர்இமெல்டா சுகுமாரிடம் வினவப்பட்டபோது, இந்நிகழ்வு மத்திய அரசால் நடத்தப்பட்டதாகவும் அதனால் தங்களால் எதுவும் செய்யமுடியாது எனவும் நழுவினார்.ஈழநேசன்
படிப்படியாக தமிழ்மக்கள்மீதான தனது மேலாதிக்கப்போக்கை நிறுவுவதில் சிங்கள தேசம் திட்டமிட்டு செயற்படுவதை இந்நிகழ்வு எடுத்துக்காட்டுவதாக உள்ளதாக பல ஊடகங்களும் சுட்டிக்காட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.









0 Responses to பாடசாலை மாணவிகளை கட்டாயப்படுத்தி சிங்கள தேசிய கீதம் பாடவைத்த நிகழ்வு (படங்கள் இணைப்பு)