வன்னியில் கடந்த ஆண்டு பொதுமக்கள், மற்றும் போராளிகள் என ஒரு இலட்சத்திற்கும் அதிகமாக கொன்றுகுவித்த சிறீலங்கா இராணுவத்தின் கட்டளைத் தளபதிகளில் ஒருவரான
Brigadier Chagie Gallage (General Officer Commanding 59 Division) என்பவர் மகிந்த ராஜபக்ஷவுடன் லண்டனில் தங்கியுள்ளதாக உறுதிப்படுத்தப்பட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.
கடந்த ஆண்டு வன்னிப்போர் உக்கிரமடைந்து இறுதிக்கட்டத்தை அடைந்தபோது அப்பகுதிகளில் இருந்த சிறீலங்கா படைப்பிரிவுகளில் ஒன்றான டிவிசன் 59 பிரிகேட்டின் கட்டளைத் தளபதியாக பணியாற்றிய Brigadier Chagie Gallage என்பவரே லண்டனில் கடந்த மூன்று நாட்களாக மகிந்தவுடன் தங்கியுள்ளதாக தெரியவந்துள்ளது.
கடந்த திங்கட்கிழமை கொழும்பிலிருந்த லண்டன் நோக்கி புறப்பட்ட மகிந்த ராஜபக்ஷவுடன் 59 ஆவது பிரிகேட் படையணி கட்டளைத் தளபதி உட்பட மேலும் சில இராணுவ அதிகாரிகளும், அமைச்சர்கள் சிலரும், மகிந்தவின் விசிறிகளும் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
ஆட்சியில் இருக்கும்போது மகிந்தவை கைதுசெய்ய மேற்குலகநாடுகள் தயக்கம் காட்டினாலும் போர்க்குற்றம் புரிந்த இராணுவத் தளபதியை கைதுசெய்யமுடியும் என தெரிவிக்கப்படுகிறது.
எனவே பிரித்தானியா வாழ் தமிழர்கள், மற்றும் தமிழ் அமைப்புக்கள் அனைவரும் ஒன்றிணைந்து உடனடி நடவடிக்கை எடுத்தால் லண்டன் வந்துள்ள இராணுவத் தளபதி சிறீலங்கா திரும்பி செல்ல வாய்ப்புக்கள் இல்லை என்றும், அவர் பிரித்தானிய காவல்துறையினரால் கைதுசெய்யப்படும் வாய்ப்புக்கள் அதிகள் உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இந்த நிலையில் இன்றையதினம் லண்டனில் மகிந்த ராஜபக்ஷ தங்கியுள்ள டோச்சஸ்டர் ஹொட்டேல் ஐ முற்றுகையிட்டு மாலை 4 மணிமுதல் 8 மணிவரை தமிழர்களால் போராட்டம் நடாத்தப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

0 Responses to வன்னிப் படுகொலைகளின் கட்டளைத் தளபதிகளில் ஒருவரான Brigadier Chagie Gallage மகிந்தவுடன் லண்டனில்...!