Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

நடைபெறவுள்ள உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் தமிழ்க் கட்சிகளின் அரங்கத்தில் இடம் பெற்றுள்ள கட்சிகளில் 4 அரசியல் கட்சிகளும் இணைந்து போட்டியிடவுள்ளதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன என வலம்புரி பத்திரிகை தெரிவித்துள்ளது.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும் தமிழ்க் கட்சிகளின் அரங்கத்தில் இடம்பெற்றுள்ள சில அரசியல் கட்சிகளுக்கும் இடையில் நடைபெற்ற பேச்சுவார்த்தையின் போது இத் தீர்மானம் எடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

இது தொடர்பில் தமிழ்த் தேசிய விடுதலைக் கூட்டமைப்பின் செயலாளர் எம்.கே.சிவாஜிலிங்கம் கருத்து தெரிவிக்கையில்,

எதிர்வரும் உள்ளூராட்சித் தேர்தலில் இரா.சம்பந்தன் தலைமையிலான தமிழ்த் தேசிய கூட்டமைப்புடன் தமிழ்க் கட்சிகளின் அரங்கத்தில் இடம் பெற்றுள்ள வீ.ஆனந்தசங்கரி தலைமையிலான தமிழர் விடுதலைக் கூட்டணி, .சித்தார்த்தன் தலைமையிலான புளொட், எமது தலைமையிலான தமிழ்த் தேசிய விடுதலைக் கூட்டமைப்பு, .பி.ஆர்.எல்.எப். (பத்மநாபா அணி) ஆகிய கட்சிகள் போட்டியிடவுள்ளதாக தெரிவித்தார்.

இது தொடர்பான பேச்சுக்கள் கடந்த 10 ஆம் திகதி முதல் நடைபெற்று வருகிறது. நேற்று நடைபெற்ற நான்காம் கட்டப் பேச்சுவார்த்தையின் போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் மேற்கூறப்பட்ட நான்கு கட்சிகளும் இணைந்து உள்ளூராட்சி சபைத் தேர்தலில் போட்டியிடுவது என கொள்கையளவில் தீர்மானிக்கப்பட்டது.

எனினும் இறுதித் தீர்மானம் இன்று காலை 10.00 மணிக்கு இடம்பெறும் முக்கிய சந்திப்பில் எடுக்கப்பட்டு கூட்டாக அறிக்கை வெளியிடப்படும் என சிவாஜிலிங்கம் தெரிவித்தார்.

இதேவேளை இது தொடர்பில் கருத்து தெரிவித்த தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவர் வீ.ஆனந்தசங்கரி, பிறக்கும் தைப்பொங்கல் அனைவருக்கும் இனிப்பான செய்தியுடன் மலரட்டும் என தெரிவித்துள்ளார்.

இதேவேளை தமிழ் தேசியத்திற்கான மக்கள் முன்னனியும் இணைந்து போட்டியிடுமா என்பது குறித்து முடிவு எடுக்கப்படாத நிலையில் டக்ளசின் ஈபிடிபியும் பிள்ளையானின் கட்சியும் அரசாங்கத்திற்கு ஆதரவளித்து தேர்தலில் போட்டியிடவுள்ளன.

0 Responses to உள்ளூராட்சி தேர்தலில் தமிழ் தேசிய கூட்டமைப்பு 03 கட்சிகள் இணையும்!

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com