Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

கிழக்கு பகுதிகளில் பெய்து வரும் கடும் மழை காரணமாக மழை நீர் தேங்கி நின்று பின் அருவியாற்றினூடாக மன்னார் மாவட்டத்தில் உள்ள தாழ்வான பகுதிகளில் வந்து தேங்குவதினால் மன்னார் மதவாச்சி பிரதான வீதியின் மடு உதவி அரசாங்க அதிபர் பிரிவுக்குற்பட்ட தம்பனைக்குளம் கிராமம் மழை நீரினால் மூழ்கியுள்ளது.

இதன் காரணமாக குறித்த கிராமத்தில் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கின் காரணமாக அங்குள்ள 531 குடும்பங்களைச் சேர்ந்த 1300 பேர்வரை பாதிப்படைந்துள்ள நிலையில் குறித்த கிராம மக்கள் மன்.கட்டையடம்பன் .வி பாடாசாலையிலும்,பொதுக்கட்டிடங்களிலும்,தேவாலயங்களிலும் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.

இவர்களுக்கு உணவுகளை இராணுவத்தினர் சமைத்து வழங்குகின்றனர்.

பாதிக்கப்பட்டு இடம் பெயர்ந்துள்ள நிலையில் பாடசாலைகளிலும்,பொதுக்கட்டிடங்களிலும் தங்கவைக்கப்பட்டுள்ள மக்களை மன்னார் ஆயர் அதி வணக்கத்திற்கூறிய இராயப்பு ஜோசப் ஆண்டகை,தமிழ் தேசியக்கூட்டமைப்பின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உருப்பினர் செல்வம் அடைக்கலநாதன் மன்னார் குரு முதல்வர் அன்ரனி விக்டர் சூடை ஆகியோர் சென்று பார்வையிட்டுள்ளதோடு இவர்களுக்கு தேவையான அவசர உதவிகளை மேற்கொள்ளுமாறு உரிய அதிகாரிகளையும் பணித்துள்ளனர்.

தம்பனைக்குளம் கிராமம் முழுவதும் வெள்ள நீரில் மூழ்கியுள்ளமையினால் அக்கிராமத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ள பல ஏக்கர் நெற்பயிர்ச்செய்கை மற்றும் வீட்டுத்தோட்டம் முற்று முழுதாக அழிவடைந்துள்ளதாக விவசாயிகள் கவலை தெரிவிக்கின்றனர்.

அப்பகுதியில் தொற்று நோய் பரவும் அபாயமும் காணப்படுகின்றமையும் குறிப்பிடத்தக்கது.





0 Responses to மழை வெள்ளத்தில் மன்னார் (படங்கள் இணைப்பு)

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com