மாமனிதர் குமார்பொன்னம்பலம் அவர்கள் படுகொலை செய்யப்பட்ட 11 ஆம் ஆண்டு நினைவு வணக்கக் கூட்டம் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தலைமையிலான தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் ஏற்பாட்டில் சனிக்கிழமை(8-1-2011) அன்று பிற்பகல் 3.00 மணிக்கு இல43, 3ம் குறுக்குத்தெரு, யாழ்ப்பாணம் என்னும் முகவரியில் உள்ள அதன் அலுவலகத்தில் ஆரம்பமாகி நடைபெற்றது.
இந்நிகழ்வு அகில இலங்கைத் தமிழ் காங்கிரஸ் கட்சியின் தலைவர் திரு.வின்சென்ற் டி போல் தலைமையில் இடம்பெற்றது.
முதலாவது நிகழ்வாக வைத்தியகலாநிதி திருமதி.யோகலட்சுமி குமார்பொன்னம்பலம் அவர்கள் ஈகைச் சுடர் ஏற்றிவைத்தார். அவரைத் தொடர்ந்து தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் முத்தியஸ்த்தர்களான திரு.ஆனந்தராஐா, திரு.வி.மணிவண்ணன், வைத்தியர்.திருலோகமூர்த்தி, திரு.சுப்பிரமணியம், திரு.குழந்தைவேலு, திரு.ஆறுமுகம், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் திரு.செ.கஜேந்திரன் ஆகியோரும் மாதகல் கடற்தொழிலாளர் சங்கத் தலைவர் திரு.மரியதாஸ், பல்கலைக்கழக மாணவன் தீபன், பல்கலைக்கழக மாணவி யாழினி, மற்றும் அகில இலங்கைத் தமிழ் காங்கிரஸ் கட்சியின் தலைவர் திரு.வின்சென்ற் டி போல் ஆகியோரும் ஏற்றி வைத்தனர்.
அதனைத் தொடர்ந்து மாமனிதர் குமார்பொன்னம்பலம் அவர்களது திருவுருவப்படத்திற்கு அவரது துணைவியார் வைத்திய கலாநிதி திருமதி யோகலட்சுமி குமார்பொன்னம்பலம் அவர்கள் மலர்மாலை அணிவித்தார். அதனைத் தொடர்ந்து பிரபல தமிழ் ஆசான் திரு.குழந்தைவேலு அவர்கள் மலர் வணக்க நிகழ்வை ஆரம்பித்து வைத்தார்.
அதனைத் தொடர்ந்து அகவணக்கம் செலுத்தப்பட்டது.
தொடர்ந்து நிகழ்வின் தலைவர் திரு.வின்சென்ற் டி போல் அவர்கள் தலைமை உரை நிகழ்த்தினார்.
தலைமை உரையினைத் தொடர்ந்து போரால் பாதிக்கப்பட்ட வறிய பல்கலைக்கழக மாணவர்களுக்கு நிதி உதவி வழங்கப்பட்டது. தமிழ்த் தேசத்தின் அரசியல் அங்கீகாரத்திற்காக உழைத்து தேசத்திற்காக உயிர் கொடுத்த மாமனிதர் குமார்பொன்னம்பலம், மாமனிதர் நடராஐா ரவிராஐ் ஆகியோர் தேசத்திற்கு ஆற்றிய சேவைக்கு மதிப்பளிக்குமுகமாக 24 மாணவர்களுக்கு தலா 5000ரூபா வீதம் நிதி உதவி வழங்கப்பட்டது. மாமனிதர் குமார்பொன்னம்பலம் அவர்களது நினைவாக அவரது குடும்பத்தினரால் 12 மாணவர்களுக்கு தலா ஐயாயிரம் ரூபா வழங்கப்பட்டது. மாமனிதர் ந.ரவிராஐ் அவர்களது நினைவாக 12 மாணவர்களுக்கு தலா ஐயாயிரம் ரூபா வழங்கப்பட்டது.
இந்நிகழ்வினைத் தொடர்ந்து நினைவு வணக்க உரைகள் இடம்பெற்றது. தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் முக்கயஸ்த்தர்களான திரு.ஆனந்தராஐா, திரு.சுப்பிரமணியம், திரு.சு.மணிவண்ணன், திரு.இளங்கோ ஆகியோரும் பல்கலைக்கழக மாணவர்கள் சார்பாக திரு.கமல் அவர்களும், மாணவிகள் சார்பாக செல்வி.துர்க்கா அவர்களும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் திரு.செல்வராசா கஜேந்திரன் ஆகியோரும் உரையாற்றினர்.
நிகழ்வில் கலந்து கொண்டவர்கள் அனைவரும் மாமனிதர் குமார்பொன்னம்பலம் அவர்கள் முன்னெடுத்த இலட்சியத்திற்காக உறுதி தளராது உழைப்போமென உறுதியெடுத்துக் கொண்டனர்.
அத்துடன் நிகழ்வு நிறைவு பெற்றது.
ஈழநேசன்
மாமனிதர் குமார்பொன்னம்பலம் ஞாபகார்த்தக் குழு
தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி

0 Responses to யாழில் மாமனிதர் குமார்பொன்னம்பலம் நினைவு வணக்க நிகழ்வு (படங்கள் இணைப்பு)